இலங்கைக்கு வரும் குறுகிய கால பயணிகளுக்கு இன்றுமுதல் இணையத்தளம் மூலமான முன் அனுமதி அவசியம்

இலங்கைக்கு குறுகியகால பயணங்களை மேற்கொள்வோர் மற்றும் இடைத்தங்கல் பயணிகள் நாட்டை வந்தடைவதற்கு முன்னர் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து பயண அனுமதியைப் பெற்றுக்கொள்வது இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓஸ்ரேலியாவில் அகதி தமிழன் நிகழ்த்திய உலக சாதனை

ஒஸ்ரேலியாவில் உள்ள அகதி தமிழர் ஒருவர் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.  தனது தலை முடியில் கயிற்றைக்கட்டி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் கால்கள் இருக்கும் வகையில்  மரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரத்தில்  தொங்கி சாதனையை படைத்துள்ளார்.

ஈராக்கில் தனது படை நடவடிக்கை முடிவுற்றதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக பிரகடனம்

வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011 23:55 ஈராக்கில் தனது படை நடவடிக்கைகள் முடிவுற்றதாக அமெரிக்கா இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியது. 2003 ஆம் ஆண்டு பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறி அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா படையெடுத்தது. இப்போது அங்கு வன்முறைகள் தொடரும் நிலையில் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். … Continued

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 148 பேர் பலி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் சங்கராம்பூர், மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சட்டவிரோத மதுபான நிலையங்களில் இவர்கள் மது அருந்தியபின் உபாதைகளுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இம்மதுவை அருந்தியதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் உட்பட … Continued

கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் பலி!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவங்களில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வி.நிரஞ்சன் (வயது 20) ஏழாலையைச் சேர்ந்த தயாபரன் கீர்த்தனன் (வயது 18) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர் இளைஞர்களாக இவர்கள் குளிக்கச்சென்ற போது கடலில் கால நிலை சீரின்மையாக இருந்துள்ளது. ஆயினும் இவர்கள் … Continued

மக்கள் போராட்டத்திற்கான அமைப்பின் உறுப்பினர்கள் கடத்தப்பட்டமை குறித்து விசாரிக்க வலியுறுத்தல்

நேற்று சனிக்கிழமை கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தமது   யாழ். மாவட்ட அமைப்பாளர் லலித்குமார  வீரராஜ், மற்றுமொருவரும் கொலை செய்யப்பட்டதாக தமக்கு தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்துசென்ற  மக்கள் போராட்டத்திற்கான இயக்கத்தின்  ஏற்பாட்டாளர் சமிர கொஸ்வத்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலளர்களுடனான சந்திப்பில் அவர் … Continued

காதலனுடன் சுற்றித்திரிந்துவிட்டு பொய்யான முறைப்பாடு செய்த பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தனது காதலனுடன் சுற்றித்திரிந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர், தான் சட்டவிரோதமாக உள்ளுறுப்புகள் அகற்றி விற்பனை செய்யும் போலி வைத்தியசாலையொன்றில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் தப்பி வந்ததாக பொய்கூறியமை அம்பலமாகியுள்ளது. தம்புள்ளையைச் சேர்ந்த இப்பெண் ஒக்டோபர் 18 ஆம் திகதி கண்டியிலுள்ள வைத்தியசாலைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.  ஆனால் அவர் அன்று வீடு திரும்பவில்லை. … Continued

முன்னாள் போராளிகளை சமூகத்தில் தனிமைப்படுத்த வேண்டாம் :அமைச்சர் கஜதீர

உணர்வு ரீதியாக முன்னாள் போராளிகளை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டாம் எனவும் எமது நாட்டின் பொருளாதார வளத்தை கட்டியெருப்புவதற்காக முன்னாள் போராளிகள் பயிற்றப்பட்டுள்ளார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் போராளிகளை விடுதலை செய்து அவர்களுக்கான சுய தொழில் … Continued

சீனச் செல்வாக்கு அதிகரிப்பது ஓர் அச்சுறுத்தல் அல்ல: இந்தியாவில் இலங்கை இராணுவத் தளபதி

இந்து சமுத்திரத்தில் அதிகரித்துவரும் சீனச் செல்வாக்கானது இந்திய உபகண்டத்திலுள்ள எந்த நாட்டுக்கும் எந்த  அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார். தெஹரதுன் நகரிலுள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் இராணுவ உத்தியோகஸ்தர்கள் பயிற்சிமுடிந்து வெளியேறும் வைபவத்தில் கலந்துகொண்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். … Continued

சிங்களத்தி செவேந்தியுடன் கைகோர்த்திருக்கும் சிறிதரன் எம்.பியின் தம்பி சிறிகுகன்!

சிறிலங்கா புலனாய்வு சிங்களத்தி செவேந்தியின் கீழ் லங்காசிறி, தமிழ்வின், மனிதன், இணையத்தளங்கள் இயங்குகின்றன. அந்த சிங்களத்தியுடன் கைகோர்த்துக்கொண்டே சிறிதரன் எம்.பியின் தம்பி சிறிகுகன் செயற்படுகிறார். இது தமிழ் மக்களை ஏமாற்றும் வேலையாகும். இதற்குரிய ஆதாரங்கள் அனைத்தும் ஆவணங்களுடன் இணைத்துள்ளோம்.