ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சின் புதிய பாலிசி ‘சூப்பர் சர்பிளஸ்’

சென்னை: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் துவக்கியுள்ள ‘சூப்பர் சர்பிளஸ்’ பாலிசியில் இதுவரை 3,000 பாலிசிகள் மூலம் 1.5 கோடி ரூபாய் பிரீமியம் கிடைத்துள்ளது.

ஸ்டீல் விலை குறைய வாய்ப்பு

புதுடில்லி: வரும் ஜூன் மாதத்திற்கு பின், இந்தியாவில் ஸ்டீல் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உருக்குத் துறை செயலர் பி.கே.ரஸ்தோகி கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் உருக்கு தொழில் துறை, 4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அரசு மேற் கொண்ட பல்வேறு நிதி நடவடிக்கைகளின் காரணமாக, இத்தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் ஏற்பட்டுள்ளது. … Continued

பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு: நாடே ஸ்தம்பிப்பு!-மக்கள் பெரும் அவதி! (09.01.2009) செய்திகள்.

டெல்லி: எண்ணை நிறுவன அதிகாரிகளின் வேலைநிறுத்தம் மற்றும் டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் ஆகிய இரட்டை அடி காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள முக்கால்வாசி பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு விட்டன. மக்கள் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஸ்டிரைக் நீடித்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் : இந்தியன் ஆயில் கார்பரேஷன் எச்சரிக்கை

புதுடில்லி : நாடு முழுவதும் 13 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஸ்டிரைக் 2வது நாளை எட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், காஸ் விலை குறைப்பு எப்போது? : மத்திய அமைச்சர் முரளி தியோரா அறிவிப்பு (08.01.2009) செய்திகள்.

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் குறைக்கப்படலாம். காஸ் சிலிண்டர் விலையும் 25 முதல் 30 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என, மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போது, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை … Continued

மியூசிக் போனை அறிமுகப்படுத்தியது நோக்கியா

சென்னை : இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒரு புது மாடல் மொபைல் போனை நோக்கியா நேற்று சென்னையில் அறிமுகம் செய்திருக்கிறது. உலகில் அதிகள் மொபைல் போனை விற்பனை செய்யும் நோக்கியா, சென்னையில் நேற்று அதன் புது மாடல் சியூசிக் போன் நோக்கியா 5800 ஐ அறிமுகம் செய்தது. எக்ஸ்பிரஸ் மியூசிக் வரிசையில் வந்திருக்கும் இந்த … Continued

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெ விலை உயர்வு

சிங்கப்பூர்: ஆசிய சந்தையில் கச்சா எண்ணை விலை பாரல் ஒன்றுக்கு 47 டாலர்களாக உயர்ந்துள்ளது. காஸா தாக்குதலைத் தொடர்ந்து கச்சா எண்ணையின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்குகிறோம் என்ற பெயரி்ல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல்.

அமெரிக்காவில் வரலாறு காணாத வேலையிழப்பு: வரிக்குறைப்பு செய்ய ஒபாமா யோசனை

வாஷிங்டன்: இரண்டாம் உலகப்போர் ஏற்பட்ட காலத்தில் இருந்ததை விட, அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான நிலையில் சிரமப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 50 லட்சம் பேர் வேலையிழந்திருக்கின்றனர். இதே நிலை நீடிக்காமல் இருக்க, பொருளாதாரத்தில் ஊக்குவிப்பு ஏற்படுத்த புதிய அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ஒபாமா செயல்படத் துவங்கி விட்டார். இம்மாத கடைசியில் ஒபாமா பொறுப்பேற்றதும், வேலையில்லாத் … Continued

தொழில்துறை வளர்ச்சிக்கு மேலும் சலுகைகள்!

டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை சகஜ நிலையில் வைத்திருக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் இரண்டாவது கட்டமாக மேலும் நிதிச் சலுகைகள் மற்றும் வட்டிக் குறைப்புகளை அறிவிக்க உள்ளது மத்திய அரசு.

சென்னையில் உலக தமிழர்களின் முதல் பொருளாதார மாநாடு

சென்னை வளர்ச்சி கழகத்தின் சார்பில் உலகத் தமிழர்களின் பொருளாதார மாநாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் சந்திப்பு வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் நடக்கிறது. தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியாவிலும் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 15 தமிழர்களுக்கு ‘தொழில் மாமணி’ விருது வழங்கப்படுகிறது.