சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பேங்க் கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை காணவில்லை

ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர்ஸின் வங்கி கணக்கில், செப்டம்பர் 2008 உடன் முடிந்த காலாண்டில் இருந்த தொகை ரூ.5,000 கோடியை அதன் பின் காணவில்லை என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

5000 பேரை வேலையிலிருந்து தூக்கும் மைக்ரோசாப்ட்

வாஷிங்டன்: அடுத்த ஒன்றரை வருடங்களில் 5000 பேரை வேலையிலிருந்து நீக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது அதன் பணியாளர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதம் ஆகும். மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தடுமாறுவதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்யம்-வாங்க விரும்பும் எல் அண்ட் டி-எஸ்ஸார்!

டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும், சத்யம் பிபிஓ பிரிவை எஸ்ஸார் நிறுவனமும் வாங்கி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிசி குப்தாவிடம், எல் அண்டு டி நிறுவனத் தலைவர் ஏஎம் நாயக் நேற்று கலந்து பேசினார்.

அமெரிக்கா: முன்னணி வங்கிகளின் காலாண்டு நஷ்டம் ரூ. 1.21 லட்சம் கோடி!!

நியூயார்க்: அமெரிக்காவின் டாப் 3 வங்கிகளான பாங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குரூப் மற்றும் மெரில் லிஞ்ச்சின் ஒரு மணி நேர நஷ்டம் எவ்வளவு தெரியுமா… ரூ.57 கோடி. ஒரு நாள் நஷ்டம் 1,350 கோடி.

லாரி ஸ்டிரைக்கால் வெல்லம் விலை வீழ்ச்சி

சேலம்: லாரி ஸ்டிரைக் காரணமாக, வெல்லம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சீசன் நேரத்தில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால், உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பிணக்கு தீர்ந்தது . உக்ரெய்ன் வழியாக ஐரோப்பாவுக்கு எரிவாயு வழங்க ரஷ்யா சம்மதம்

உக்ரெய்ன் வழியாக மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை எரிவாயுவை வழங்குவதற்கு ரஷ்யா உறுதியளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. இனி மேலும் இடைஞ்சல்கள் ஏதும் ஏற்படாதிருக்கும் பட்சத்தில் இது நடக்கும் என்று ரஷ்ய எரிசக்தி நிறுவனம் காஸ்ப்ரோம் கூறியிருக்கிறது.

மின்சார கார்- போர்டு, டொயோட்டா திட்டம்

உலக அளவில் கார் தொழிற்சாலைகளில் முன்னணி நிறுவனங்களான அமெரிக்காவின் போர்டு நிறுவனமும், ஜப்பானைச் சேர்ந்த டொயாட்டாவும் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளன.

விப்ரோ, மெகாஷாப்ட் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்தது உலக வங்கி

புதுடில்லி : ஒப்பந்த அடிப்படையில் உலக வங்கிக்காக வேலை பார்த்து வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஓப்பந்தத்தை டிசம்பர் 25ம் தேதி உலக வங்கி, 8 வருடங்களுக்கு ரத்து செய்திருந்தது.

5.91%: தடாலடியாகக் குறைந்தது பணவீக்கம்!

டெல்லி: இந்திய பணவீக்க விகிதம் இந்த வாரம் தடாலடியாகக் குறைந்துள்ளது. கடந்தவாரம் 6.38 சதவீதம் என அறிவிக்கப்பட்ட பணவீக்கம், இந்த வாரம் 5.91 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

பணிந்தது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கம் : வேலைநிறுத்தம் வாபஸ்

புதுடில்லி : மத்திய அரசின் கண்டிப்பான நடவடிக்கையால், கடந்த புதன்கிழமையில் இருந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கம் ( ஓ எஸ் ஓ ஏ ) நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.