பங்குச்சந்தை: துவக்கமே அமர்க்களம்!

மும்பை: நாட்டின் பங்குவர்த்தகம் இன்று அமர்க்களமாகத் துவங்கியது. எடுத்த எடுப்பிலேயே 156 புள்ளிகள் கூடுதலாக வர்த்தகத்தைத் துவங்கியது சென்செக்ஸ்.

சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவை விசாரிக்க செபிக்கு சுப்ரிம் கோர்ட் அனுமதி : நாளை விசாரணை துவங்குகிறது

புதுடில்லி : சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவை விசாரிக்க செபிக்கு சுப்ரிம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவிடம் விசாரணை நடத்த, அனுமதி கேட்டு செபி – பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம், சுப்ரிம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

சீனாவில் 2 கோடி கிராமப்புற இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பு

பெய்ஜிங் : எல்லா நாடுகளிலுமே கிராமத்து இளைஞர்களுக்கு அவரவர் சொந்த கிராமத்தில் வேலை கிடைப்பது இல்லை. வேலை வேண்டுமானால் அவர்கள் நகரங்களுக்குத்தான் சென்றாக வேண்டும். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடான சீனாவிலும் இதே நிலைதான்.

மார்ச் மாதத்தில் நானோ கார்: டாடா நிறுவனம் தீவிரம்

புதுடில்லி: வரும் மார்ச் மாதத்திற்குள் டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் ‘நானோ’ கார் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. டாடா கார் நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் நானோ கார், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.2,000 கோடிக்கு சத்யத்தை வாங்கிக்கொள்ள ஸ்பைஸ் கம்யூனிகேஷன் விருப்பம்

மும்பை : பி.கே.மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், சத்யம் கம்ப்யூட்டர்ஸை ரூ.2,000 கோடிக்கு வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்திருகிறது. கடும் நிதி தட்டுப்பாட்டில் சிக்கி சீரழிந்திருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்கிக்கொள்ள ஏற்கனவே பெரிய க்யூ நிற்கிறது.

டாடா மோட்டார்ஸ் அடைந்த நஷ்டம் ரூ.263 கோடி

மும்பை : 2008 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த மூன்றாவது காலாண்டில், இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் ரூ.263.26 கோடி நஷ்டமடைந்திருக்கிறது.

2006ம் ஆண்டு விலையில் பெட்ரோல்: முரளி தியோரா தகவல்

புதுடில்லி: ‘கடந்த இரண்டு மாதங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை இரண்டு முறை குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ளது’ என, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.

620 பேருக்கு வேலை இது தான் டாடா

ஜாம்ஷெட்பூர்: எட்டு மாதத்திற்கு முன், வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட 620 ஊழியர்களை திரும்ப அழைத்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.ஜாம்ஷெட்பூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக, இந்தத் தொழிற்சாலையில் உள்ள ஐந்து பிரிவுகள், 10 வாரங்களுக்கு முன் மூடப்பட்டன.

இயக்குநர் குழு முடிவுகளால் உயரத்துக்குப் போன சத்யம் பங்குகள்!

மும்பை: அதளபாதாளத்தில் விழுந்து போய், இனி மீள வழியே இல்லை என்ற நிலையிலிருந்த சத்யம் நிறுவனப் பங்குகள் இப்போது கிடுகிடு உயர்வைச் சந்தித்து வருகின்றன. இன்று மட்டுமே 17 சதவிகித உயர்வைக் கண்டுள்ளது சத்யம் பங்குகள்.

சிறையில் இருக்கும் ஆடிட்டர்களை பார்ட்னர்ஷிப்பில் இருந்து நீக்கியது பிரைஸ்வாட்டர்

ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ராமலிங்க ராஜூ, வட்லமணி ஹநிவாஸ் ஆகியோருக்கு, மோசடியில் <உதவியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடிட்டர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் துல்லாரி ஆகியோரை பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலக்கி விட்டதாக ஆடிட் நிறுவனமான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் தெரிவித்திருக்கிறது.