வரலாறு காணாத அளவில் நெல் விலை உயர்வு: மூட்டை அரிசி ரூ. 400 வரை அதிகரிப்பு

அரிசி விலை, வரலாறு காணாத அளவில், மூட்டைக்கு 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மே மாதத்துக்கு பின், அரிசி, கிலோ 50 ரூபாய் வரை விற்கப்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் அரிசி தேவையை 40 சதவீதம் அளவுக்கு கர்நாடகா, ஆந்திர மாநிலங்கள் தான் பூர்த்தி செய்கின்றன.

சந்திர பாபுவுக்கு ராஜூ கொடுத்த லஞ்சம் ரூ. 275 கோடி!

ஹைதராபாத்: தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு சத்யம் ‘மோசடி’ தலைவர் ராமலிங்க ராஜூ ரூ. 275 கோடி வரை லஞ்சமாக கொடுத்திருப்பதாக அக்கட்சியிலிருந்து விலகிய பிஎன்வி பிரசாத் தெரிவித்துள்ளார்.

டாடா: 1650 பேர் வேலையில் சேர்ப்பு!!

ஜாம்ஷெட்பூர்: ஒருபக்கம் கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள டாடா நிறுவனம், இன்னொருபக்கம் முதல்முறையாக புதிய பணியாளர்களைச் சேர்த்துள்ளது.

காதலர் தினம் எதிரொலிரோஜா ஏற்றுமதி உயர்வு

சென்னை : காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி நெருங்குவதை தொடர்ந்து, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டங்களிலிருந்து, ரோஜாப் பூக்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

25 சதவீத பங்குகளை ரூ.2,000 கோடிக்கு விற்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் முடிவு

புதுடில்லி : கம்பெனியின் நிர்வாகம் மற்றும் நிதித்துறையை சீரமைக்கும் விதமாக, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அதன் 25 சதவீத பங்குகளை ரூ.2,000 கோடிக்கு விற்க முடிவு செய்திருக்கிறது.

இன்னும் மூன்று ஆண்டுகளில் 10,000 பேருக்கு வேலை : எல் அண்ட் டி ஏற்பாடு

வதோதரா : இஞ்சினியரிங் மற்றும் கட்டுமான தொழிலில் புகழ்பெற்ற நிறுவனமான எல் அண்ட் டி, அதன் வெவ்வேறு திட்டங்களில் பணியாற்ற இன்னும் மூன்று ஆண்டுகளில் 10,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது.

500 ரூபாய்க்கு லேப்-டாப்: ஆறு மாதத்தில் அமல்

புதுடில்லி: எல்லாருக்கும் கம்ப்யூட்டர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இன்னும் ஆறு மாதத்தில் நாடு முழுவதிலும் உள்ள 20 ஆயிரம் கல்வி நிறுவனங்களுக்கு,. 500 ரூபாயில் ‘லேப்-டாப்’ கம்ப்யூட்டர் வழங்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

சத்யம் புதிய சேர்மன் கிரண் கார்னிக்!

ஹைதராபாத்: சத்யம் புதிய தலைமைச் செயல் இயக்குநராக ஏஎஸ் மூர்த்தி நியமிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள், அந்நிறுவனத்துக்கு புதிய தலைவராக நாஸ்காம் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒபாமா அறிவித்த சலுகையால் பங்குச் சந்தையில் சாதக போக்கு

கடந்த வெள்ளியன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்ட நான்காவது காலாண்டு பொருளாதார புள்ளி விவரப்படி வளர்ச்சி 3.8 சதவீதமே இருந்ததால் சந்தைகள் அங்கு தாறுமாறாக கீழே சென்றன. 3.8 சதவீதம் என்பது கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத ஒன்று.

கட்டணத்தைக் குறைக்க காலிங் கார்டுகள்!

டெல்லி: இந்தியாவிலிருந்து எங்கும் எந்த மொபைலுக்கும் குறைந்த கட்டணத்தில் பேசும் வசதி கொண்ட தொலைபேசி அழைப்பு அட்டைகளை இந்திய தொலைபேசித் துறை அறிமுகப்படுத்தப் போகிறது.