இராணுவத்தின் குண்டுமழையால் இலங்கையில் உயிர்வாழ முடியாது: தமிழகம் சென்ற அகதிகள்

இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளில் குண்டுமழை பொழிவதால் அங்கு உயிர்வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகம் சென்ற அகதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஏழு அகதிகள் கடந்த புதன்கிழமை பேசாலைக் கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினர்.

ஈழப் பிரச்சனை தொடர்பாக சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

posted in: தமிழ்நாடு | 0

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இன்று சனிக்கிழமை சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்.