புலிகள் என சந்தேகப்படுவோரை தடுத்து வைப்பது, புலிகளுக்கு அது ஒரு பயிற்சி முகாமாக அமையும் வாய்ப்பு: ரணில்

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர மேடை செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கூற்றுப்படி 9 ஆயிரம் தமிழீழ விடுதலைப்புலிகள் வவுனியா முகாம்களில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆயிரம் குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை: முல்லை. அரச அதிபர் இமெல்டா தகவல்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் 30 ஆயிரம் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளுக்குப் பொறுப்பாகவுள்ள அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய இரதோற்சவம் இன்று காலை நடைபெறுகின்றது. இவ்வருடம் வழமையை விட பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதான தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு 2 சர்வதேச விருதுகள்

வாஷிங்டன்: கொழும்பு நீதிமன்றத்தால் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் திசநாயகத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அமைப்புகள் விருது அறிவித்துள்ளன.

வன்னியில் கைதான ஐந்தாவது தமிழ் மருத்துவரும் பிணையில் விடுவிப்பு

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவேளை, அரசுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை வெளிநாட்டு செய்தி முகவர்களுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்தாவது தமிழ் மருத்துவரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இடம்பெயர் முகாம்களில் இருந்து தினமும் 20 முறைப்பாடுகள் கிடைக்கின்றன: மனித உரிமைகள் ஆணைக்குழு

வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தினமும் 20 முதல் 25 வரையிலான எழுத்து மூல முறைப்பாடுகள், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிக்கோவை அடுத்து இலங்கையிலேயே அதிகளவில் செய்தியாளர்கள் காணாமல் போயுள்ளனர்: எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம்

இலங்கையும், மெக்ஸிக்கோவும் செய்தியாளர்கள் அதிகமாக காணாமல் போகும் நாடுகளின் பட்டியல்களில் முதன்மை வகிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் குறைந்தது இரண்டு பேராவது காணாமல் போயுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! – சிவாஜிலிங்கம் எம்பி

கோவை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் குறித்த விசாரணைக்காக இந்திய முகவர் அமைப்பு விரைவில் இலங்கை விஜயம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தவொரு நாட்டிலும் இல்லாத மோசமான ஜனாதிபதி ஆட்சிமுறையே இலங்கையில் காணப்படுகின்றது: ரில்வின் சில்வா

உலகின் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத ஜனாதிபதி ஆட்சி முறைமையே இலங்கையில் காணப்படுவதாக ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களை விடவும் மோசமான ஓர் ஜனாதிபதி ஆட்சி முறையே தற்போது காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.