இரவும் பகலும் பெண்களை துன்புறுத்தும் இலங்கை படையினர்; ஆண்கள் எதிர்த்துப் பேசினால் துப்பாக்கியால் தாக்குதல்: விடுதலையான இளம்பெண்

இரவும் பகலும் இலங்கைப் படையினரால் தாம் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும், முகாம்களில் உள்ள ஆண்கள் படையினரை எதிர்த்துப் பேசினால், துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவும் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான இளம் தமிழ்ப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களை முகாமில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது;வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது: ஜே.வி.பி.

யுத்தத்திற்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத அப்பாவி மக்களை இடைத்தங்கல் முகாம்களில் சிறை வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களை நடைமுறை வாழ்க்கைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என்றும், வரலாறு தான் பிரபாகரனை உருவாக்கியது என்றும் ஜே.வி.பி. தெவித்துள்ளது.

கே.பி.யிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான தகவல்களை மக்களுக்கு அரசு அம்பலப்படுத்த வேண்டும்: ஐ.தே.க

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணசான்றிதழை இன்னும் இலங்கை இந்தியாவுக்கு வழங்கவில்லை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரண சான்றிதழை இன்னும் இந்தியாவுக்கு .இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை என இந்திய அரசாங்கத்திற்கு ஆதரவான செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

வன்னி முகாம்களில் பெருந்துயரம்!-சேனல் 4 வீடியோ வெளியீடு

லண்டன்: வன்னியில் சிங்கள ராணுவம் மேற்கொண்ட இன அழிப்புப் போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய வீடியோவை பிரிட்டனின் ‘சேனல் 4’ தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.

இன்று புகழாரம் பாடுபவர்கள் நாளை அரசியல் அநாதைகளாகவும் அரசியல் கோமாளிகளாகவுமே மாறப் போகின்றனர் – ஜே.வி.பி.

ஆரம்பக் கொள்கைகளை மறந்து தமது சுய இலாபத்திற்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு புகழாரம் பாடுபவர்கள் உண்மையிலேயே பஸ்களில் ஏறி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பிச்சை எடுப்பவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று ஜே. வி. பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கருணாவும் நானும் வெளியேறியதே புலிகள் பலவீனமடையக் காரணம்: முதலமைச்சர் சந்திரகாந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடைந்து அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டமைக்கு அந்த அமைப்பிலிருந்து தாங்கள் வெளியேறியமையே பிரதான காரணம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெவித்தார்.

நாட்டையும் மக்களையும் சீரழிக்கும் மஹிந்த அரசைத் தோற்கடிப்போம்! அனைத்து மக்களையும் அணிதிரள ரணில் பகிரங்க அழைப்பு

ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் சீரழித்துக்கொண்டிருக்கும் மஹிந்த அரசின் ஆட்சியைத் தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் அணிதிரளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வணங்காமண் நிவாரணம் தமிழர்களுக்கு கிடைக்க கூடாது என்ற நோக்கில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் செயற்படுகிறது: பொதுமக்கள் கவலை

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தை நிர்வகிப்பவர்கள், சிங்கள இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், வேண்டுமென்றே நிவாரணப் பொருட்கள் அல்லல்பட்டுவரும் தமிழர்களுக்கு கிடைக்க கூடாது என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முகாம்களில் இருந்து தப்பியவர்கள் விடுதலைப்புலிகளா?: வவுனியாவில் வீடுகள், வீதிகளில் படையினர் சோதனை அதிகரிப்பு

இடம்பெயர் முகாம்களில் இருந்து தப்பியவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களா என்ற சந்தேகத்தில், வவுனியா நகரிலும், நகரைச் சூழ்ந்த பகுதிகளிலும், வீடுகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.