இடம்பெயர் மக்கள் மத்தியில் நூறு பிரபாகரன்களை உருவாக்குகின்றார் ஜனாதிபதி: மங்கள சமரவீர

வவுனியா இடம்பெயர் முகாம்களில் உள்ள மக்களை மிக மோசமாக நடத்தி, அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை ஜனாதிபதி உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். இந்தப் பிரபாகரன்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை நாடிச் செல்வதோடு, சிங்களவர்கள் மீதும் பகைமை கொள்வர் என்று மங்கள சமரவீர எம்.பி. நேற்று முன்தினம் கூறினார்.

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு இராணுவத்தினரை அனுப்ப அனுமதியோம் என்பதை உலகுக்கு அறிவிக்குமாறு மக்களிடம் மஹிந்த வேண்டுகோள்

நாட்டை மீட்ட இராணுவ வீரர்களை யுத்தக்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல விடமாட்டோம் என்ற செய்தியை உலகுக்கு தென்மாகாண மக்கள் பறைசாற்ற வேண்டும். இவ்வாறு நேற்று மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மகளிர் அமைப்புகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க்களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது: ஈழநாடு

தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் இன்றைய ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாம் தமிழர்கள் – ராணுவம் மோதல்: தமிழர் பலி

வவுனியா: இடம் பெயர்ந்தோர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது. அதில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு … Continued

எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த முடியாது: அரசாங்கம்

எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸில் இலங்கைப் படைவீரர்களுக்கு எதிராக போலியான போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் தங்கியிருந்த சந்திரிகா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நேற்று சென்னையில் பாதுகாப்பு காரணமாக விமான நிலையத்திலேயே இரண்டு மணிநேரம் தங்கியிருந்து கொழும்பு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் மீதான வெற்றியைக் காட்டி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறார் மகிந்த: ஜே.வி.பி.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றியைக் காட்டி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கீழ்த்தரமான அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் வாக்காளர்களின் உரிமையைக் கேலிக்கூத்தாக்குகிறார். அத்துடன், நாட்டின் சட்ட திட்டங்களையும் மீறி நாட்டின் ஜனநாயகத்தை கேலி செய்கிறார் எனக் குற்றம்சாட்டி இருக்கிறார் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமசிங்க அமரசிங்க.

இலங்கை விடயத்தில் சர்வதேசம் கவலை; மஹிந்தவுக்கு ஐ.நா. செயலர் அவசர கடிதம்; உடனடியாக பதிலளிக்கவும் வலியுறுத்து

இலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களின் நிலைமை உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவலையை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை தாம் அனுப்பி வைத்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீமூன் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர் முகாம் மக்கள் விரக்தியின் விளிம்பில்: நேரில் பார்த்த ஐ.நா. விசேட பிரதிநிதி; இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் பொறுமையிழந்த நிலையிலும் விரக்தியடைந்த நிலையிலும் காணப்படுகின்றனர் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நேற்று முகாம்களிலுள்ள மக்களை நேரில் பார்வையிட்ட ஐ.நா.சபையின் விசேட பிரதிநிதி லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.