விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான ஆயுதக் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது?

posted in: தமிழீழம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஆயுதக் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார் : சரத் பொன்சேகா தகவல்

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைமையை எந்தவொரு சக்தியாலும் அழிக்கமுடியாது: எஸ்.ஜெயானந்தமூர்த்தி பா.உ.

posted in: தமிழீழம் | 0

விடுதலைப்புலிகளின் தலைமை பலத்திலும் கொள்கையிலும் உறுதியாகவே இருந்தது. அவரை எந்தவொரு சக்தியாலும் இலகுவில் அழித்துவிட முடியாது. என தேசியத் தலைவரின் மாவீரர் உரைகள் அடங்கிய நூல் வெறியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

இந்தோனேசியா கைது செய்ய முயன்றால் படகை தகர்ப்போம்- தமிழ் அகதிகள்

மேரக் (இந்தோனேசியா): இந்தோனேசிய கடற்படையினர் எங்களைப் படகிலிருந்து இறக்க முயன்றாலோ அல்லது கைது செய்ய முயன்றாலோ நாங்கள் படகைத் தகர்த்து விடுவோம், நாங்களும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தமிழ் அகதிகள் மிரட்டியுள்ளனர்.

கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தல்-தமிழக குழுவிடம் ராஜபக்சே

கொழும்பு: இலங்கை சென்றுள்ள திமுக- காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அளவளாவினர். அவருக்குப் பொன்னாடை போர்த்தினர். தமிழ் மக்களை விரைவில் அவரவர் இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

முகாம்களில் அவலம் இல்லை: காய்களுக்கு மட்டும் சிக்கல்: காங். எம்.பிக்கள்

கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளோ, வேறு தேவைகளோ அவசியமாக இல்லை. அவர்கள் தங்களை சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டும் என்பதையே பிரதான கோரிக்கையாக முன் வைத்தனர். முகாம்களில் உள்ள மக்கள் அனைத்துலக விதிகளின்படி பராமரிக்கப்படுகிறார்கள் என்று திமுக – காங்கிரஸ் கூட்டணிக் குழுவில் இடம் பெற்றுள்ள 2 காங்கிரஸ் … Continued

போர்க்களத்தின் கடைசி நாளில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, பொட்டு அம்மான் தற்கொலை: “த நேசன்” பத்திரிகை புதிய தகவல்கள்

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக இலங்கையின் ஆங்கில பத்திரிகையான “த நேசன்” செய்தி வெளியி்ட்டுள்ளது.

படையினர் அனுமதிக்கும் வரை ஒரு குடும்பம் கூட மீளக் குடியமர்த்தப்படமாட்டாது: மகிந்த

சிறிலங்காப் படையினர் தெளிவான அனுமதி வழங்காதவரை இடம்பெயர்ந்த மக்களில் ஒருவரைக்கூட மீளக்குடியமர்த்தப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.

பிரபாகரன் இறக்கவில்லை தமிழகத்தில் உள்ள அகதிகள் நம்பிக்கை: அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவர் 8 பேர் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளார் என உளவுத்துறையினரிடம் அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்த கட்டளைக்கு காத்திருக்கும் ‘கரும்புலிகள்’!- இலங்கை மீடியா

கொழும்பு: கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் ஊடுறுவியுள்ளனர். உரிய இலக்குகள் மற்றும் ஆலோசனைக்காக அவர்கள் காத்துள்ளனர் என்று இலங்கை மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன.