பெண்களே நாட்டின் கண்கள் – தனது பிறந்த நாளில் வறுமை ஒழிப்பு திட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

எனது பிறந்த நாளை யொட்டி வழக்கமான உதவிகள் வழங்குவதுடன், இந்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரியில் பிறக்கும் 330 ஏழை பெண் குழந்தைகளுக்கு ரூ.33 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அகதிமுகாம்களின் நிலைமை தற்போது இருப்பதைவிட அடைமழை காலத்தில் பன்மடங்கு மோசமடையும். – மனிதாபிமான பணியாளர்கள் எச்சரிக்கை

தற்போதைய மழை காரணமாக வன்னிமுகாம்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாரிய சுகாதார நெருக்கடி உருவாகலாம் என மனிதாபிமானம் பணியாளர்கள் ஐ.நாவின் மனிதாபிமான செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளனர்

செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சர்வதேச பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனை, இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை விடுக்கப்படலாம் என்று இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது

அகதி முகாமகளில் தமிழர்களுக்கு மற்றொரு முள்ளிவாய்க்கால் அவலம்: சர்வதேசம் இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?: சுரேஸ் பா.உ. கேள்வி

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் அவலத்தைத வேடிக்கை பார்த்த சர்வதேச சமுகம் இன்னும் சில தினங்களில் வவுனியா அகதி முகாம்களில் இடம்பெறப்போகும் ஆயிரக்கணக்கான மரணங்களையும் வேடிக்கை பார்க்கப் போகின்றதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பா. உ. சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதுக்க முடியாது என்கிறார் மகிந்த ராஜபக்ஸ – முகாம்களில் மக்கள் ‘எலிகளைப் போல வாழ்கிறார்கள்’- ஆனந்த சங்கரி

விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாகவோ உள்நாட்டிலோ மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வங்கியில் ரகசிய கணக்குகள்: பத்மநாதன் பகிரங்க ஒப்புதல்

கொழும்பு :உலகம் முழுவதும் பல நாடுகளில் நூற்றுக் கணக்கான வங்கிக் கணக்குகளை விடுதலைப் புலிகள் பராமரித்து வந்ததாக, அந்த அமைப்பின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன் என்ற கே.பி., தெரிவித்துள்ளார்.

முகாம் மக்களின் மோசமான வாழ்க்கை நிலை சிறிலங்காவின் நற்பெயரைக் கெடுத்துவிடுமாம்: கவலைப்படுகிறார் ரணில்

வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் மோசமான வாழ்க்கை நிலை மற்றும் பருவமழை காரணமாக நோய்கள் பரவ தொடங்கியிருப்பது காரணமாக சிறிலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படப் போகின்றது என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

வெள்ள பாதி்ப்பு: ஐ.நா. தான் காரணம்-கூறுகிறது இலங்கை

வன்னி: பெரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்காமல் ஐ.நா. சபையயை குற்றம் சாட்டியும், வேறு விதமாக திசை திருப்பியும் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

வெள்ளம் நிறைந்த சதுப்பு நிலத்தில் மக்கள் வாழும் நிலைமை மிகவும் பரிதாபகரமானது: வாசுதேவ நாணயக்கார

வெள்ளம் நிறைந்த சதுப்பு நிலத்தில் மக்கள் வாழும் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. கூடாரங்களில் தங்கியுள்ள மக்களை மனிதர்களாக மதித்து அங்கிருந்து வெளியேற்றி பாடசாலைகளிலாவது தங்க வைக்கவேண்டும். என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வன்னியில் 80% பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்பும் மக்களை மீளக்குடியர்த்தத் தாமதம் ஏன்: ரணில் கேள்வி

வன்னியில் 80 சத வீதமான பிரதேசங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டன. அப்படியிருக்க ஏன் இன்னும் அங்கு மக்களை மீளக் குடியமர்த்தவில்லை. தாமதத்துக்கு காரணம் என்ன? இப்படிக் கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க.