கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தல்-தமிழக குழுவிடம் ராஜபக்சே

கொழும்பு: இலங்கை சென்றுள்ள திமுக- காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அளவளாவினர். அவருக்குப் பொன்னாடை போர்த்தினர். தமிழ் மக்களை விரைவில் அவரவர் இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஸ்டாலின் விழா-பத்திரிக்கையாளர்கள் புறக்கணிப்பு

குற்றாலம்: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவின்போது பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்துமாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதைத் தொடர்ந்து அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் ஸ்டாலின் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறினர்.

இதை தான் சொல்ல போகிறது திமுக குழு-ஜெ

சென்னை: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் ஆய்வு என்ற பெயரில் ஒரு குழுவை அனுப்பியுள்ள முதல்வர் கருணாநிதி, இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் கேலிக்கூத்தாக்கி விட்டார், ஏமாற்ற நினைக்கிறார் என்று கடுமையாக கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: தமிழக நாடாளுமன்ற குழுவினர் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் தமிழக மீனவர்கள் தற்போதும் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது சம்பவம் அரங்கேறியுள்ளது.

முகாம்களில் அவலம் இல்லை: காய்களுக்கு மட்டும் சிக்கல்: காங். எம்.பிக்கள்

கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளோ, வேறு தேவைகளோ அவசியமாக இல்லை. அவர்கள் தங்களை சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டும் என்பதையே பிரதான கோரிக்கையாக முன் வைத்தனர். முகாம்களில் உள்ள மக்கள் அனைத்துலக விதிகளின்படி பராமரிக்கப்படுகிறார்கள் என்று திமுக – காங்கிரஸ் கூட்டணிக் குழுவில் இடம் பெற்றுள்ள 2 காங்கிரஸ் … Continued

இன்னும் 6 மாதத்தில் 1 1/2 கோடி குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி: அமைச்சர் ஆற்காடு வீராசாமி தகவல்

சென்னை மாநகராட்சி 77-வது வார்டில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா செனாய்நகரில் நடந்தது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஏழை குடும்பங்களுக்கு கலர் டி.வி.யை வழங்கி பேசிய பொழுது இன்னும் ஆறு மாதத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படுமென்றார்.

இன்று தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய இரதோற்சவம் இன்று காலை நடைபெறுகின்றது. இவ்வருடம் வழமையை விட பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! – சிவாஜிலிங்கம் எம்பி

கோவை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் குறித்த விசாரணைக்காக இந்திய முகவர் அமைப்பு விரைவில் இலங்கை விஜயம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தவொரு நாட்டிலும் இல்லாத மோசமான ஜனாதிபதி ஆட்சிமுறையே இலங்கையில் காணப்படுகின்றது: ரில்வின் சில்வா

உலகின் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத ஜனாதிபதி ஆட்சி முறைமையே இலங்கையில் காணப்படுவதாக ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களை விடவும் மோசமான ஓர் ஜனாதிபதி ஆட்சி முறையே தற்போது காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.