இ‌ஸ்ரோ ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் அருகே து‌ப்பா‌க்‌கி சூடு

பெ‌‌ங்களூரு ‌‌பியாலலூ‌ரி‌ல் உ‌ள்ள இ‌ஸ்ரோ ‌ஆ‌ரா‌‌ய்‌ச்‌சி மைய‌ம் அருகே ம‌ர்ம நப‌ர்க‌ள் து‌ப்பா‌க்‌கி சூடு நட‌‌த்‌தின‌ர். பாதுகா‌ப்பாள‌ர்களு‌ம் ப‌தி‌ல் தா‌க்குத‌‌லி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளதா‌ல் அ‌‌ங்கு பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

மும்பையை விட்டு விரட்டிவிடுவார்களா? சிவசேனா மிரட்டலால் என்மகள் வேதனை; ஷாருக்கான் உருக்கமான பேட்டி

ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் கருத்து தெரிவித்து இருந்தார்.

மத்திய அரசு செயலில் பவார் அதிருப்தி : தெலுங்கானா முடிவில் அவசரக் கோலம்

புதுடில்லி : “”தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு அவசரக் கோலத்தில் செயல்பட்டு விட்டது. திட்டமிட்டு செயல்படாமல், அரைகுறையாக எடுத்தநடவடிக்கையே, தற்போது அம்மாநிலத்தில் நிலவும் பிரச்னைக்கு காரணம்,” என சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பிரபாகரன் தலைமையில் இலங்கையில் மீண்டும் போர் மூளும்: வைகோ

இலங்கைத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பதற்காக இலங்கையில் மீண்டும் போர் மூளும் என்றும், அதை பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் சிறை பிடிக்கப்பட்ட 76 தமிழ் அகதிகள்- வான்கூவரில் வைத்து விசாரணை

வான்கூவர்: இலங்கைத் தமிழர்கள் அடங்கிய கப்பல் ஒன்றை கனடா போலீஸார் சிறை பிடித்து அதில் இருந்தவர்களை வான்கூவருக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடா நாட்டு போலீஸார், பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பில் வைத்து தடுத்துப் பிடித்தனர்.

புலி ஆதரவு இணையத்தளம் புதினம் திடீர் மூடல்

சென்னை: விடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான புதினம் திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இத்தளம் இயங்காது என்ற செய்தியை புதினம் வெளியிட்டுள்ளது.

பிரபாகரன் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு: இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் 17 ஆண்டு விசாரணை முடிவுக்கு வரும்

ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை செசன்சு நீதிமன்றம் அடுத்த மாதம் நவம்பருக்கு தள்ளி வைத்துள்ளது.

58,000 தமிழர்கள் இன்று முதல் 15 நாட்களுக்குள் வீடு திரும்புவார்கள்- கருணாநிதி

சென்னை: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களில் முதல் கட்டமாக 58,000 பேர் 15 நாட்களுக்குள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தலித்கள் ஆலய பிரவேசம்-வேதாரண்யத்தில் துப்பாக்கி சூடு

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது ஊர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்தோனேசியா கைது செய்ய முயன்றால் படகை தகர்ப்போம்- தமிழ் அகதிகள்

மேரக் (இந்தோனேசியா): இந்தோனேசிய கடற்படையினர் எங்களைப் படகிலிருந்து இறக்க முயன்றாலோ அல்லது கைது செய்ய முயன்றாலோ நாங்கள் படகைத் தகர்த்து விடுவோம், நாங்களும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தமிழ் அகதிகள் மிரட்டியுள்ளனர்.