அவர்களால் பிரபாகரனை கைதுசெய்ய முடியாது- பிரபாகரனின் சகோதரி

” எனது சகோதரரை வெகு சீக்கிரம் கொல்லப்போவதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் பாதுகாப்பாகவேயுள்ளார். அவரை இலங்கை இராணிவத்தினரால் கைது செய்ய முடியாது ” என விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதரி திருமதி விநோதினி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

துலூஸ் நகரில் தமிழர்கள் போராட்டம்(பட இணைப்பு)

பிரான்ஸ் தென் மாநிலமான துலூஸ் நகரின் இதயமான நகரசபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் மக்கள் கடும்குளிரையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டு சிங்கள சிறீலங்கா அரசின் மனித உரிமைமீறல்களைக் கண்டிக்கின்ற பதாதைககளத் தாங்கி நின்றனர்.

வெள்ளைவான் ஆயுததாரிகளினால் குடும்ப பெண் கடத்தல்

புத்தளம் உடப்பில் வசித்துவருபர் வெள்ளைவான் ஆயுததாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அவரின் தாயார் முந்தல் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களுக்கெதிராக தாக்கல் செய்த மனுவை குற்றத்தடுப்பு பிரிவினர் வாபஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொடர்பாக குற்றத் தடுப்புப் பிரிவினர் தாக்கல் செய்திருந்த மனு இன்று வாபஸ் பெறப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகியோருக்கு எதிராகவே குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கு:எதிரிக்கு பிணை வழங்குவதற்குகொழும்பு மேல் நீதிமன்றம் மறுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரன் படுகொலை வழக்கின் பிரதான எதிரியை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை வழக்கு விசாரணை, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது பிரதான எதிரியான ஜோன் ஸ்ரன் … Continued

இராணுவத்தின் குண்டுமழையால் இலங்கையில் உயிர்வாழ முடியாது: தமிழகம் சென்ற அகதிகள்

இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளில் குண்டுமழை பொழிவதால் அங்கு உயிர்வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகம் சென்ற அகதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஏழு அகதிகள் கடந்த புதன்கிழமை பேசாலைக் கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினர்.