பிரித்தானியா எயார்வேஸ் நிறுவனமும் அங்கம் வகிக்கும் one world(வன்வேர்ல்ட் )விமான அணியில் இடம்பெற்றுள்ள 66 வருட காலமாக சேவையில் ஈடுபட்டு வருகின்ற மலேவ் என்ற ஹங்கேரியா விமான நிறுவனம் ஒன்று நிதிநிலை மோசாமடைந்த காரணத்தினால் வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும் விமான சேவை இயங்காது என்றும் அறிவிக்கப்படுகின்றது.

ஆங்கில‌‌‌ப் புத்தாண்டு பொது‌ப் பலன் 2012

ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறையில் மேல்நோக்கு கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, அஷ்டமி திதி, வரீயான் நாமயோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் 1.1.2012ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி தன்னம்பிக்கை கிரகமான புதனின் ஆதிக்கத்தில் (2+0+1+2=5) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அதிகம் சம்பாதிக்க வேண்டும்.அதை … Continued

தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா? (யாழ் காணொளி)

கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக் களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் … Continued

இணையத்தில் ‘செக்ஸ்’ தேடலில் பாகிஸ்தான் முதலிடம்; இந்தியா இரண்டாமிடம்

இணையத்தளத்தில் ‘செக்ஸ்’ குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. கூகுள் இணையத்தளத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான தரவுகளின்படி, செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா இரண்டாமிடத்திலும் வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா … Continued

இலங்கைக்கு வரும் குறுகிய கால பயணிகளுக்கு இன்றுமுதல் இணையத்தளம் மூலமான முன் அனுமதி அவசியம்

இலங்கைக்கு குறுகியகால பயணங்களை மேற்கொள்வோர் மற்றும் இடைத்தங்கல் பயணிகள் நாட்டை வந்தடைவதற்கு முன்னர் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து பயண அனுமதியைப் பெற்றுக்கொள்வது இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓஸ்ரேலியாவில் அகதி தமிழன் நிகழ்த்திய உலக சாதனை

ஒஸ்ரேலியாவில் உள்ள அகதி தமிழர் ஒருவர் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.  தனது தலை முடியில் கயிற்றைக்கட்டி நிலத்திற்கு மேல் ஒரு மீற்றர் உயரத்தில் கால்கள் இருக்கும் வகையில்  மரத்தில் சுமார் 23 நிமிடங்கள் மற்றும் 24 செக்கன்கள் அந்தரத்தில்  தொங்கி சாதனையை படைத்துள்ளார்.

கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் பலி!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவங்களில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வி.நிரஞ்சன் (வயது 20) ஏழாலையைச் சேர்ந்த தயாபரன் கீர்த்தனன் (வயது 18) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர் இளைஞர்களாக இவர்கள் குளிக்கச்சென்ற போது கடலில் கால நிலை சீரின்மையாக இருந்துள்ளது. ஆயினும் இவர்கள் … Continued

மக்கள் போராட்டத்திற்கான அமைப்பின் உறுப்பினர்கள் கடத்தப்பட்டமை குறித்து விசாரிக்க வலியுறுத்தல்

நேற்று சனிக்கிழமை கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தமது   யாழ். மாவட்ட அமைப்பாளர் லலித்குமார  வீரராஜ், மற்றுமொருவரும் கொலை செய்யப்பட்டதாக தமக்கு தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்துசென்ற  மக்கள் போராட்டத்திற்கான இயக்கத்தின்  ஏற்பாட்டாளர் சமிர கொஸ்வத்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலளர்களுடனான சந்திப்பில் அவர் … Continued

காதலனுடன் சுற்றித்திரிந்துவிட்டு பொய்யான முறைப்பாடு செய்த பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தனது காதலனுடன் சுற்றித்திரிந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர், தான் சட்டவிரோதமாக உள்ளுறுப்புகள் அகற்றி விற்பனை செய்யும் போலி வைத்தியசாலையொன்றில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் தப்பி வந்ததாக பொய்கூறியமை அம்பலமாகியுள்ளது. தம்புள்ளையைச் சேர்ந்த இப்பெண் ஒக்டோபர் 18 ஆம் திகதி கண்டியிலுள்ள வைத்தியசாலைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.  ஆனால் அவர் அன்று வீடு திரும்பவில்லை. … Continued

முன்னாள் போராளிகளை சமூகத்தில் தனிமைப்படுத்த வேண்டாம் :அமைச்சர் கஜதீர

உணர்வு ரீதியாக முன்னாள் போராளிகளை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டாம் எனவும் எமது நாட்டின் பொருளாதார வளத்தை கட்டியெருப்புவதற்காக முன்னாள் போராளிகள் பயிற்றப்பட்டுள்ளார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் போராளிகளை விடுதலை செய்து அவர்களுக்கான சுய தொழில் … Continued