கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்:- “றோ” அமைப்பின் முன்னாள் செயலாளர் பி.இராமன்

கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் மிகவும் நிதானமானவை:- பல்வேறு சந்தர்ப்பங்களில் குறுகியதும் விரிவானதுமான வகையில் சட்டத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நீதியரசர் சரத் என் சில்வா

நீதிமன்றத்தினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் எழுந்தமானவையல்ல. அவை மிகவும் நிதானமானதாகவே தீர்மானிக்கப்படுகின்றன என்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

ஆயர்கள் கோரிக்கையை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது: நத்தார் நாளை முன்னிட்டு போர் நிறுத்தம் இல்லை லக்ஸ்மன் குலுகல்ல தெரிவிப்பு.

நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கையின் ஆயர்கள் கூட்டாக விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவது பற்றி கால எல்லை குறிப்பிட்டுக் கூறமுடியாது! உதய நாணயகார

செவ்வாய்க்கிழமை நடந்த மோதல்களில் இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டதுஆயினும், கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான கால எல்லைபற்றி உறுதியாகக் கூறமுடியாதுள்ளது

7 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் வன்னிக்கு விஜயம்

வவுனியாவிலுள்ள 57ஆவது 59ஆவது படைத் தலைமையகத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள், கடந்த 15ஆம் திகதி விஜயம் செய்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களுக்கெதிராக தாக்கல் செய்த மனுவை குற்றத்தடுப்பு பிரிவினர் வாபஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொடர்பாக குற்றத் தடுப்புப் பிரிவினர் தாக்கல் செய்திருந்த மனு இன்று வாபஸ் பெறப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகியோருக்கு எதிராகவே குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கு:எதிரிக்கு பிணை வழங்குவதற்குகொழும்பு மேல் நீதிமன்றம் மறுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரன் படுகொலை வழக்கின் பிரதான எதிரியை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை வழக்கு விசாரணை, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது பிரதான எதிரியான ஜோன் ஸ்ரன் … Continued

இன்று சர்வதேச தேயிலை தினம்

தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. அந்த இனிய தேயிலையின் தினம் இன்று சர்வதேச ரீதியில் நினைவுகூரப்படுவதும் ஒரு இனிப்பான செய்திதானே?