ஜூலை- 13 குண்டு வெடிப்பு வழக்கு : குஜராத்தில் பதுங்கிய பயங்கரவாதி சிக்கினான்

ஆமதாபாத்: 21 பேரை பலி வாங்கியதுடன் 100 பேரை காயமுற செய்த மும்பை ( ஜூலை- 13 ) தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்ட பயங்கரவாதி ஒருவனை பயங்கரவாத தடுப்பு படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என உளவுத் தகவல்- உஷார் நிலையில் மும்பை விமான நிலையம்

டெல்லி: தீவிரவாதிகள் வி்மானம் மூலம் வந்து தாக்கக் கூடும் என்று மத்திய உளவு அமைப்புகளிடமிருந்து வந்த எச்சரிக்கைத் தகவலைத் தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முடிவு ஆமதாபாத் நீதிமன்றத்திடம்: குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, செப்.12: குஜராத் கலவர வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் 63 அதிகாரிகளை சேர்ப்பது குறித்து ஆமதாபாத் விசாரணை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

குஜராத் கலவரம்- நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் கோர்ட் முடிவு செய்யலாம்- உச்ச நீதிமன்றம்

டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அகமதபாத் நகரில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த பயங்கர வன்முறையில் 69 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இது தொடர்பான விசாரணை அறிக்கையை கீழ் நீதிமன்றத்திடம் தாக்கல் செய்யுமாறு … Continued

பறிமுதல் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வீடு பள்ளிக்கூடமாக மாறியது: பீகார் அரசு அதிரடி

பாட்னா: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவை, பீகார் அரசு, பள்ளிக்கூடமாக மாற்றியுள்ளது.

ஜெகனுக்கு ஒரு லட்சம் கோடி வந்தது எப்படி? : டில்லியில் பிரசாரம்: தெ.தேசம் தீவிரம்

புதுடில்லி: மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி ,கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக, ஏழு பக்க அறிக்கை ஒன்றை தயார் செய்து, அதை பார்லிமென்ட் உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கும் பணியை, தெலுங்குதேசம் கட்சி கடந்த திங்கள் … Continued

கலைஞர் டிவிக்கு ரூ.1.25 கோடி அபராதம்: 2 வாரத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!

டெல்லி: டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடமிருந்து ரூ. 200 கோடி பெற்ற வழக்கில் கலைஞர் டிவிக்கு அமலாக்கப் பிரிவு ரூ. 1.25 கோடி அபராதம் விதிக்கும் என்று தெரிகிறது.

ரயில்வே கட்டணங்களை உயர்த்த மத்திய அரசு முடிவு

நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் உயர் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து ரயில்வே துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

நில அபகரிப்பு என்ற பெயரில் பொய் வழக்குகள்- குடியரசுத் தலைவரிடம் இன்று திமுக மனு

டெல்லி: நில அபகரிப்பு என்ற பெயரில் திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குகள் போட்டு வருவதாக கூறி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து திமுக எம்.பிக்கள் மனு அளிக்கவுள்ளனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் இல்லை: டிராய் அறிக்கையை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் முடிவு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறி “டிராய்” அளித்துள்ள அறிக்கையை ஆய்வு செய்யப் போவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.