முல்லைத்தீவு மீன்வாடிகளை இலக்கு வைத்து வான் தாக்குதல்கள்: இருவர் காயம்

முல்லைத்தீவுக் கடற்பகுதியில் சிறீலங்காக் வான்படை படையினர் மீன்வாடிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை 5:00 மணிக்கும் பின்னர் 5:35 நிமிடத்துக்குமாக இரு தடவைகள் வந்த சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் பரா வெளிச்சக் குண்டுகளை வீசி குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் கரையோரப் பகுதி மீன் வாடிகள் இரண்டும் படகுகள் இரண்டும் எரிந்து நாசமாகியுள்ளன. சங்கர் மற்றும் சுதர்சன் ஆகியோரின் மீன் வாடிகளே தாக்குதலுக்கு இலக்காகி எரிந்து நாசமாகின.

பொதுமக்களின் வீடுகள் இரண்டும் சேதமாகியுள்ளன. யோகநாதன் மற்றும் கமலேந்திரன் ஆகியோரின் வீடுகளே தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்தன.
இதேவேளை, மீண்டும் இன்று காலை 7:15 நிமிடத்துக்கும் காலை 8:00 மணிக்குமாக இரு தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil