வவுனியா முகாம்களுக்கு லின் பாஸ்கோ விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கை சென்றுள்ள ஐ நாவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ இன்று வடக்கேயுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்துள்ளார். 

அங்குள்ள முகாம்களின் நிலமைகளை அவர் நேரில் கண்டறிந்துள்ளார்.

நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதிலும், பாடசாலைகள் மற்றும் பொருளாதார கட்டுமானங்களை மேம்படுத்துவதன் மூலம் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பிலும் சில முன்னேற்றங்கள் காணப்படுவதாக லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.

தான் சந்தித்த மக்கள் உடனடியாக தமது இருப்பிடங்களுக்கு செல்லவே விரும்புகிறார்கள் என்றும் ஆனால் அப்படி செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களிடையே தங்களது எதிர்காலம் குறித்த கவலை காணப்படுவதாகவும் அவர்கள் பொறுமையிழந்து வருகிறார்கள் என்றும் லின்பாஸ்கோ கருத்து வெளியிட்டுள்ளார்

இலங்கையில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தமான நிலையில் இருப்பதன் காரணமாக ஐ நா ஏமாற்றம் அடைந்திருப்பதாலேயே அவர் அங்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil