தைவான் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை

தைவானின் முன்னாள் பிரதமர் ஷென் ஷுய் பியனுக்கு ஊழல் குற்றச்சாட்டின்பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அவர் பதவியில் இருந்தபோது மோசடி செய்தது, கருப்பு பணம் குறித்துப் பொய் கணக்குக் காட்டியது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் ஊழல் செய்து பல மில்லியன் டொலர்கள் அளவில் பணம் சேர்த்தது ஆகிய குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

அவருடன் கூட அவரது மனைவியும் அவர் பதவியில் இருந்தபோது ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தைவானில் பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

சீனாவோடு தைவான் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் தற்போதைய தைவானின் ஆளும் தரப்பினர், சீனாவின் பிடியிலிருந்து விலகி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறிவரும் சென்னை அவரது அரசியல் கருத்துக்களுக்காகப் பழிதீர்க்கும் நோக்கத்துடன் தண்டித்திருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil