பொலிஸார் மீது குற்றம் சுமத்தினால் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மீண்டும் தலை தூக்கும்: கோத்தபாய

பொலிஸார் மீது குற்றச் சாட்டுக்களை அடுக்கிச் செல்வதன் மூலம் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கலாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் துறையின் ஒரு சிலர் மேற்கொள்ளும் குற்றச் செயல்களுக்காக சகல பொலிஸார் மீதும் பழி சொல்வது நியாயமாகாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பொலிஸார் மீது குற்றச்ச்சாட்டுக்களை அடுக்குவதன் மூலம் கொலை மற்றும் கப்பம் கோரல் நடவடிக்கைகள் மீண்டும் இனி உயர்வடையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும் சில ஊடகங்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை உதாசீனம் செய்யும் வகையிலான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பொலிஸ் அதிகாரிகளின் தனிப்பட்ட பிரச்சினைகளைக் கூட உத்தியோக ரீதியில் தொடர்புபடுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil