வாய் பேச இயலாத ஜோடிகள் காதல் திருமணம் செய்து ஸ்டேஷனில் தஞ்சம்

சிவகாசி:சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ராஜன்(25). வாய்பேச இயலா தவர். சிவகாசி மீனாட்சி நகரை சேர்ந்த சால்வாடி ஈஸ்வரன் மகள் கலைவாணி(24). இவரும் வாய்பேச இயலாதவர். இருவரும் ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை சிவகாசியில் உள்ள காதுகேளாதோர், வாய்பேச இயலாதோர் பள்ளியில் படித்து வந்தனர்.


இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.இவர்களின் காதலை பெற்றோரிடம் தெரிவித்த போது ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தரகுமலை மாதா கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பாதுகாப்பு கோரினர். போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேசினர். முறைப்படி திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் சம்மதித்தனர். இருவரும் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil