ஆயர்கள் கோரிக்கையை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது: நத்தார் நாளை முன்னிட்டு போர் நிறுத்தம் இல்லை லக்ஸ்மன் குலுகல்ல தெரிவிப்பு.

நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கையின் ஆயர்கள் கூட்டாக விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா அரசின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்ததாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு அரசியல் பேச்சுகளுக்குத் திரும்பினால்தான் போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவது எனும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அப்படியான ஒரு நிலை இல்லாத நிலையில் போர் நிறுத்தம் எதுவும் இல்லை என தெரிவித்தள்ளார்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil