தேர்தலுக்குப் பிறகாவது தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைய முன்வரவேண்டும்: அரியநேத்திரன்

தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக யாழ்., வவுனியா தேர்தலுக்குப் பிறகாவது தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின்கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று கூட்டமைப்பு எம்.பி. ப.அரியநேத்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த எம்.பி. பத்மநாதனுக்கான அனுதாபப் பிரேரணை உரையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:

2004ஆம் ஆண்டு 22 எம்.பிக்களுடன் நாம் நாடாளுமன்றத்திற்கு வந்தோம். இப்போது அதிக எம்.பிக்களை இழந்த கட்சியாகவுள்ளோம்.

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டபோது பத்மநாதனுக்கு தொலைபேசி வழியாகப் பல மிரட்டல்கள் வந்தன. அவர் அவற்றையெல்லாம் உதறித்தள்ளித் துணிவுடன் அரசியலில் நுழைந்தார்.

நாம் இப்போது பத்மநாதனை இழந்தாலும் கூட அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து செய்வோம். தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாத் தேர்தலில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி யெடுத்தது. அது வெற்றியளிக்கவில்லை.

இதற்குப் பின்னராவது தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil