மலேசியாவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள்:மத்திய அரசு தலையிட டி.ஆர்.பாலு கோரிக்கை

மலேசியாவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள் 21-பேர் தாயகம் திரும்ப மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தில்லியில் புதன்கிழமை சந்தித்து இக் கோரிக்கையை விடுத்தார்.இக் கோரிக்கையை ஏற்ற பிரணாப் முகர்ஜி,உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக தமிழகத்தைச் சேர்ந்த 21-இளைஞர்களிடம் தலா ரூ.1.70-லட்சம் பெற்றுகொண்டு அவர்களை மலேசியா வரை அழைத்துச் சென்று ஏமாற்றி விட்டு சென்றார் உமர் அலி என்னும் ஏஜெண்ட்.

மலேசியாவில் ஆதரவின்றி கோயில் ஒன்றில் தங்கியுள்ளனர் அந்த இளைஞர்கள்.இதுகுறித்து தகவலறிந்ததன் பேரில் உதவி கோரி மத்திய அரசை அணுகியுள்ளார் டி.ஆர்.பாலு.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil