7 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் வன்னிக்கு விஜயம்

வவுனியாவிலுள்ள 57ஆவது 59ஆவது படைத் தலைமையகத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள், கடந்த 15ஆம் திகதி விஜயம் செய்தனர்.

இதன்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி நமது படை அதிகாரிகள், மேற்படி ஆலோசகர்களுக்கு விளக்கம் அளித்திருப்பதாக, பாதுகாப்பு அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வன்னியில் இருந்து வவுனியாவுக்குச் சென்றுள்ள மக்களையும், தம்மிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் இந்த ஆலோசகர்கள் சந்தித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

படையினருக்குப் பல்வேறு இராணுவ உதவிகளை வழங்கிவரும் அனைத்துலக நாடுகள், தற்பொழுது களமுனைகளுக்கு நேரடியாகச் சென்று கள நிலவரங்களைக் கேட்டறியும் அளவுக்குப் படைத்துறை ஊக்குவிப்பு வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil