விசுவமடுவில் கடுமையான மோதல்: சொல்வது சிறிலங்கா அரசின் தொலைக்காட்சி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெறுவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தொலைக்காட்சியான ‘ரூபவாஹினி’ ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிற்பகல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடுவுக்கு அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தை படையினர் கைப்பற்றி விட்டதாக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று பிற்பகல் 1:30 நிமிடத்துக்கு ஒளிபரப்பான ‘ரூபவாஹினி’ செய்தியில் விசுவமடுவில் மோதல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான செய்திகளை அரச தொலைக்காட்சி ஒளிபரப்புவதுடன் சில திரிபுபடுத்தப்பட்ட காட்சிகளை காண்பிப்பதாகவும் வன்னி கள நிலைமைகளை நன்கு தெரிந்த வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil