பயங்கரவாத அமைப்புகளை முற்றிலும் ஒழிக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது : பிரணாப் திட்டவட்டம்

புதுடில்லி : பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக ஒழிக்கும் வரை பாகிஸ்தானுடன் தடைபட்ட அமைதி பேச்சுவார்த்யை புதுப்பிக்கும் பேச்சுக்கே இடமில்லை என பிரணாப் திட்வட்டமாக தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒரு பகுதி சதி பாகிஸ்தானில் தான் தீட்டப்பட்டது என கடந்த 12ம் தேதி பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ஒப்புக்கொண்டார் . இந்நிலையில், இந்தியாவிடம் நேற்று 30 கேள்விகள் அடங்கிய தொகுப்பை இந்தியாவுக்கான பாக்., ஐ கமிஷனர் ஷாஹித் மாலிக் ஒப்படைத்தார். அந்த கேள்விகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாக துவங்கியுள்ளன . இதன்படி , பயங்கரவாதிகள் தொலைபேசி உரையாடல் பதிவு , பயங்கரவாதிகள் உபயோகித்த மொபைல் போன்கள் மற்றும் சாட்டிலைட் போன்கள் குறித்து தடையயியல் பிரிவினர் அளித்துள்ள அறிக்கை , பயங்கரவாதிகள் , பாகிஸ்தானில் இருந்த தங்களது இயக்கத்தின் தலைவர்களுக்கு தொடர்பு கொண்ட எண்கள் , அதற்கான ஆதாரங்கள் , தொலைபேசி உரையாடலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளின் புகைப்படங்கள் ஆகி‌ய ஆதாரங்களை பாகிஸ்தான் கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . அஜ்மல் கசாபை பொறுத்தவரை , கசாபின் வாக்குமூலம் ; கசாபிடம் இருந்து கைபற்ற ஆவணங்கள் , ஆகியவற்றை ஒப்படைக்குமாறு பாக்.., கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது . மேலும் கசாபிடம் இந்திய போலீசார் நடத்திய விசாரணையின் போது , ஏதாவது தொலைபேசி எண்‌களை கசாப் கொடுத்திருந்தால், அதையும் கொடும்குமாறு பாக்., கேட்டுள்ளது . பாகிஸ்தானின் கேள்விகளுக்கு இன்றே பதில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜி , பாக்., உடன் அமைதி பேச்சுவார்த்தை , பயங்கரவாத அமைப்புகளை பாக்., மண்ணில் இருந்து அந்த நாடு முற்றிலுமாகவே ஒழித்த பிறகே ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil