‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (11.02.09) செய்திகள்
பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பாக ,d;W புதன் கிழமை ( 11..02.2009) அன்று பிரான்சுத்தமிழ்
மகளிர் அமைப்பினர் சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது.
சரியாக பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவிருக்கிறது. மிகவும் குறுகிய கால இடைவெளியில்
பிரெஞ்சுக்காவல்துறையினரால் இவ்வார்ப்பாட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையால்
அனைத்துத்தமிழ்உறவுகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்ப்பெண்கள்
அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த 25 வருடங்காக 6 போர் நிறுத்தங்களுடன் இலங்கையில் நடைபெற்று வரும் போரினால்
சிறிலங்கா 20 ஆயிரம் பில்லியன் டொலர் பொருளாதார அழிவுகளை சந்தித்துள்ளதாக கொழும்பு
ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
கடந்த 25 வருடங்களுக்கு 6 போர் நிறுத்தங்களுடன் நடைபெற்று வரும் போரினால் சிறிலங்கா 20
ஆயிரம் பில்லியன் டொலர் பொருளாதார அழிவுகளை சந்தித்துள்ளது.
எனவே, தற்போது உலகில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக்கொள்ளும் சக்தி
சிறிலங்காவுக்கு கிடையாது.
சிறிலங்கா அரசின் ஏற்றுமதித்துறையில் 60 விகிதம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளையே
நம்பியுள்ளது.
உல்லாச பயணத்துறை பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களில் பல
விடுதிகள் மூடப்படும் நிலை தோன்றலாம்.
ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளின் உயரதிகாரிகள் தற்போது பங்களாதேஸ் போன்ற நாடுகளை நாடி
செல்கின்றனர். இதுவும் நீண்டகால போக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும்.
சிறிலங்காவின் தேயிலை தொழில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. றப்பர், கறுவா உற்பத்திகளும்
பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதால் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1983-களில் 3 லட்சத்து 38 ஆயிரம் உல்லாசப் பயணிகள் இசிறிலங்காவிற்கு வருகை
தந்திருந்தனர். ஆனால், 2008 ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரம்.
எனினும், கம்போடியாவை எடுத்தோமானால் 1983 ஆம் ஆண்டு 2 லட்சம் உல்லாசப்பயணிகள் அங்கு
சென்றிருந்தனர். தற்போது அதன் எண்ணிக்கை 20லட்சம் ஆகும்.
எனவே, இந்த இழப்புக்களால் சிறிலங்காவிற்கு ஏற்பட்ட இழப்புக்கள் 6 ஆயிரம் பில்லியன்
ரூபாய்களாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!
இலங்கையின் வடக்கே இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும்
மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேறி இராணுவ
கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொதுமக்கள் மீது முல்லைத்தீவு மாவட்டம்
உடையார்கட்டு பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19
சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன், 75 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்தத் தாக்குதலுக்குத்
தாம் பொறுப்பல்ல என்றும் இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
போர்ப்பிரதேசத்தில் இருந்து சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு
வருவதைத் தடுப்பதற்காகவே இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை விடுதலைப்புலிகள்
பொதுமக்கள் மீது நடத்தியிருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் குற்றம்
சுமத்தியிருக்கின்றார்..
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் காயமடைந்தவர்களையும் வவுனியா
மற்றும் அநுராதபுரம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை
இராணுவத்தினர் மேற்கொண்டிருந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது..
!!!!!!!!!!!
புதுமாத்தளன் பகுதியில் எறிகணை வீச்சில் 19 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தமக்கு
தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர்
ஒருவர், எனினும், புதுமாத்தளன் பகுதியில் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களை
ஏற்றுவதற்காக தமது படகுகள் நேற்று சென்ற வேளை, தமது படகுகள் கரையை அடைவதற்கு முன்னதாக
அங்கு கரையில் காத்திருந்த நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள் மீது எறிகணைகள் வந்து
வீழ்ந்து வெடித்ததில் 16 பேர் கொல்லப்பட்டதாகக் கூறினார்..
அந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தமக்குத் தெரியவில்லை என்றும் அவர்
குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!.
இதற்கிடையில் உடையார்கட்டுக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினரிடம் 1046 சிவிலியன்கள்
வந்து சேர்ந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது
!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,
தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை உடன் கைது செய்து, போர்க்குற்றங்களுக்காக
விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி நெதர்லாந்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இக்கண்டன ஆர்ப்பாட்டம் நெதர்லாந்தின் த கேக் நகரில் உள்ள அனைத்துலக போர்க் குற்றவியல்
நீதிமன்றத்தின் முன்பாக எதிர்வரும் புதன்கிழமை (18.02.09) பிற்பகல் 1:00 மணி தொடக்கம்
பிற்பகல் 3:00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதில் பெருந்திரளாக மக்களை கலந்துகொள்ளுமாறும், நெதர்லாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள்
இதற்கு ஆதரவு வழங்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ள காணாமல் போதலிற்கு
எதிரான அமைப்பான “இக்காட்” அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் 06 59000260 எனும்
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
!!!!!!!!!!!!!!!!!!!
மோதல் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் உள்ள பாடசாலைகள் பொது
இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பாடசாலைகள் பலவும் இடம்பெயர்ந்த மக்களால்
நிறைந்து வழிகின்றன. எனினும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பு
நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களோ, பொதுநிறுவனங்களோ, ஊடகவியலாளர்களோ இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான
இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் உள்ளவர்கள், வன்னியில் இருக்கும் தமது உறவினர்களின் நிலைமை குறித்து அறிய
முடியாதவர்களாக இருப்பதுடன், இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களில் தமது உறவினர்களும்
இருக்கின்றார்களா என்பதைச் சென்று பார்க்கவோ அல்லது அறிந்து கொள்ளவோ முடியாத
நிலைமையில் உள்ளனர்.
தமது உறவினர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும், அறிவதற்கும் தேவையான ஏற்பாடுகளைச்
செய்வது குறித்து அதிகாரிகள் அக்கறையற்று இருப்பதாகப் பொதுமக்கள் பலரும் குற்றம்
சாட்டியுள்ளனர். அதேவேளை, வன்னிப்பகுதியில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் தாக்குதல்
சம்பவங்களில் கொல்லப்பட்டோரின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு
வரப்பட்டபோதிலும், இறந்தவர்கள் யார் என்பதைப் பொதுமக்கள் அறியமுடியாதவர்களாக
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறந்தவர்களின் உடைமையில் உள்ள அடையாள அட்டை மற்றும் ஆவணங்களில் உள்ள விபரங்களைக்கூட
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடவில்லை என்றும், இதனால் உறவினர்கள், தெரிந்தவர்கள்
இருந்தால்கூட, இறந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதென்றும் கவலை
தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!
விசுவமடு பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத்
தெரிவிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட 10 சடலங்களில் இரண்டு
மாத்திரமே, அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 8 சடலங்களும்
பெண்களுடையவை என்றும் அவை அடையாளம் காணப்படுவதற்காக வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, உருத்திரபுரம், சி9 என்ற இடத்தை முகவரியாகக் கொண்ட கணேசன் பிரதாபன் (33),
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த சண்முகநாதன் சசிதராஜ் (37) ஆகியோரே இவ்வாறு
அடையாளம் காணப்பட்டனர். பிரதாபனின் சடலம் உறவினர் ஒருவரும், மற்றைய சடலம் இறந்தவருடன்
வந்ததாகத் தெரிவிக்கப்பட்ட ஒருவரும் பொறுப்பேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 29 பேர் வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!!
மொனராகலைச் சிறைச்சாலையில் கடந்த 6 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்படடி;ருந்த
பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 25 முஸ்லிம் விறகு வெட்டிகளுக்கு மொனராகலை மேல்
நீதிமன்றம் நேற்று ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அம்பாறை – பொத்துவில் மாவட்ட எல்லைப்புற காட்டில் விறகு வெட்டிக்
கொண்டிருந்த வேளை 26 முஸ்லிம்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு
மொனராகலைப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். சட்ட விரோதமான முறையில் காட்டு மரங்களை
வெட்டி அரச உடைமைகளை சேதப்படுத்தியதாக இவர்கள் மீது பொலிஸார் குற்றம்
சுமத்தியிருந்தனர்.
கைதான 26 முஸ்லிம்களில் ஒருவர் விளக்கமறியலில் இருந்த வேளை மரணமானார். நேற்று மேல்
நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, எதிரிகள் குற்றத்தை ஒப்புக்
கொண்டதையடுத்து ஒரு வருட சிறைத் தண்டனை இவர்களுக்கு விதிக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவில் ஏற்பட்டிருக்கும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கு அதிகாரப் பகிர்வே ஒரு சிறந்த தீர்வாக அமையும் என இந்திய வெளிவிவகார
அமைச்சர் பிரணாப் முஹர்ஜி மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா விடயம் தொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனொன், இந்திய
வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
வடபகுதியிலுள்ள மக்களின் நிலைமைகள் குறித்து இந்தியாவை நம்பியிருப்பதாக கனேடிய
வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பு
குறித்துத் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளோம் என முஹர்ஜி பதிலளித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அண்மையில் முஹர்ஜி சிறிலங்காவுக்கு வருகைதந்த போது இலங்கை இனப்பிரச்சினைக்கு
13வது திருத்தச்சட்ட மூலத்துக்கு அப்பால் சென்றுகூட தீர்வை முன்வைக்கத் தயார் என
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!
பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக நல்லாட்சியை நோக்கி எனும் தொனியில் சார்க் நாடுகளின்
பாராளுமன்ற விவகார அமைச்சர்களின் மாநாடு கொழும்பில் இடம்பெற்றுவருகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு
ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்ற சார்க் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில்
எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இந்த மாநாடு இடம்பெறுகின்றது.
சார்க் நாடுகளின் நல்லாட்சிக்கான முரண்பாடுகளை தீர்த்தல், நல்லாட்சியை ஏற்படுத்துகின்ற
வேளையில் முகம் கொடுத்த அனுபவங்கள் தொடர்பில் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுவருகின்றது.
அத்துடன் வலயநாடுகளுக்கிடையிலான அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக
கலந்துரையாடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற விவகார
அமைச்சர்களுக்கான அடுத்த மாநாடு மாலைதீவில் 2012 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!
india
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
சார்பில் வரும் 17ஆம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரமாண்ட மனிதச்சங்கிலி
பேரணி நடத்தப்படும் என்று அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்
கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க மாணவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்
என்று கேட்டுக் கொண்ட ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்த பிரச்சனையில்
தமிழகம் கொந்தளிக்கட்டும் என்று ஆவேசமாக
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்றிரவு நடந்த கண்டன பொதுக்
கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலர் வைகோ பேசுகையில், விடுதலைப்புலிகள் போர்
நிறுத்தத்தை அறிவித்தபோது கப்பல், கப்பலாக ஆயுதங்கள் இறக்குமதி செய்தது இலங்கை அரசு.
ஆனால் இங்கிருந்து என் சகோதரர்களுக்கு 10 லிட்டர் டீசல் போய் விட்டால் கடத்தல்
என்கிறார்கள். இனிவரும் இளைஞர்கள் எங்களைப் போன்று இருக்கமாட்டார்கள்.
இனிவரும் இந்நாட்டு இளைஞர்கள் கடல்வழியாக ஆயுதங்களோடு புறப்படுவார்கள். அப்படி ஆயுதம்
ஏந்தும் சூழ்நிலை வந்தால் நான் முதல் ஆளாக நிற்பேன். உன் பாதுகாப்பு சட்டம் கால்
தூசிக்கு சமம். மாணவர்களே வீதிக்கு வாருங்கள், கிளர்ச்சி பறவட்டும், தமிழகம்
கொந்தளிக்கட்டும். இந்திய ஒருமைப்பாடு சிதறிவிடும் என்ற பயம் இந்திய அரசுக்கு வரட்டும்.
என்னுடைய இந்த நிலைப்பாட்டால் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் பிரச்சனை இல்லை
என்று வைகோ ஆவேசமாக பேசினார்.
!!!!!!!!!!!!!!!!!!!
முதலமைச்சர் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்றும், அவர்
நலமாக உள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.முதலமைச்சர் கருணாநிதிக்கு
கடுமையான முதுகுவலி ஏற்பட்டதால் கடந்த ஜனவரி 26ஆம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வலி குறையாத காரணத்தினால்
எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள வலியை சரி செய்வதற்கு
அறுவை சிகிச்சை செய்வதென மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்ததும் அவர் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு
அங்கு ஒரு வாரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். கருணாநிதிக்கு அறுவை
சிகிச்சை நடைபெறுவதையொட்டி மருத்துவமனைக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி,
மு.க.முத்து, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராசா ஆகியோர் வந்திருந்தனர்.
முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள்
கனிமொழி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
!!!!!!!!!!!!
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிட்டு, வடக்கு பகுதியில் வசிக்கும் தமிழர்களின்
பாதுகாப்பு மற்றும் உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
வேண்டுகோள் விடுத்துள்ளது. .
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிக்கியுள்ள அப்பாவி தமிழர்களை பாதுகாக்கும்
வகையில் செயல்பட வேண்டுமென்று இலங்கை அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள்
விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தெற்கு மற்றும் வடக்கு தமிழக தலைவர்கள்
ஆர்.வி.எஸ். மாரிமுத்து மற்றும் டாக்டர் எம்.எல். ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் வடக்கு பகுதியில் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே நடைபெற்று
வரும் போர் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
யுத்த பகுதியில் 2.5 லட்சம் அப்பாவி தமிழர்கள் சிக்கிக் கொண்டி ருப்பதால் இந்தியாவில்
உள்ளவர்கள் இந்த போரை மிகவும் கவலையோடு கவனித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக இலங்கை போரில் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக
வெளியான செய்தி, இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்கள் மத்தியில்
கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை கலாச்சார மற்றும் பாரம்பரிய உறவை கொண்டவை. நவீன உலகில்
தீவிரவாதத்தை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது.
எனினும் தீவிரவாததத்தை ஒடுக்க முற்படும்போது மனித உயிர்களுக்கு ஏற்படும் இழப்பை குறைக்க
வேண்டும்.
குறிப்பாக யுத்த பகுதியில் சிக்கியுள்ள அப்பாவிகளின் உயிரை காக்க வேண்டும். இந்த இலங்கை
போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதை புகைப்படங்களில் பார்க்கும் போது மிகவும்
வேதனை யாக உள்ளது. பலர் உயிரிழந் துள்ளனர்.
எனவே தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஈடுபடும்போது, தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க
தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் தமிழர்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாத்து அவர்கள் சம உரிமையோடு
நடத்தப்படுவதையும் இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிட்டு தமிழர்களின் உயிர் மற்றும் உடமைகள் காக்கப்பட
உறுதி செய்ய இதுவே ஏற்ற தருணமாகும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!
நடப்பு மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. பொதுத்
தேர்தல்களை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் நாட்டின் பல்வேறு பிரச்சனைகள்
குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்கும் இந்தக் கூட்டத் தொடரில் ஆளும் காங்கிரஸ் கட்சி
அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் பா.ஜ.க., பிற கட்சிகள் நாட்டின் பாதுகாப்பு,
பயங்கரவாதம், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள்
குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.
!!!!!!!!!!!!!!
world
நேற்று நடைபெற்ற இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் கடிமாக் கட்சியைச் சேர்ந்த ஸிபி லிவ்னி
பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்ரேலின் இரண்டாவது பெண் பிரதமராவார்.
இவர் 2006 ஆம் ஆண்டிலிருந்து வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது. 50 வயதான இவர் பலம் பொருந்திய ஒரு பெண்ணாக இஸ்ரேலில் பேசப்படுபவர்.
!!!!!!!!!!!!!!!
மேற்கு பிரேசில் உள்ள அமேசான் காடுகளில் 21 வயது மனிதர் ஒருவரை பழங்குடியினர் சிலர்
கொன்று அவரது உடல் உறுப்புகளை வறுத்துத் தின்றதை நேரில் பார்த்த ஒருவர் புகார்
தெரிவித்ததாக பிரேசில் காவல்துறை கூறியுள்ளது.
இந்த அதிர்ச்சி தரும் கொடூர சம்பவம் பிப்ரவரி 3ஆம் தேதி குலினா பழங்குடியினர்
காட்டுப்பகுதியில் நடந்துள்ளது. ஒசீலியோ அல்வேஸ் டீ கார்வால்ஹோ என்பவரை அடையாளம்
தெரியாத கும்பல் ஒன்று கொலை செய்து அவரை சாப்பிட்டதாக நேரில் பார்த்த மற்றொரு பழங்குடி
வகுப்பை சேர்ந்த நபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
5 நபர்கள் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர் என்றும் அவர்களது நோக்கம் என்னவென்று
தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த கொடூர நரமாமிசக் கும்பலிடம் சிக்கிய அந்த நபரின் குடும்பத்தினர் மீதமுள்ள அவரது
உடலை கொலை நடந்த இரண்டு நாட்கள் கழித்தே பெற முடிந்துள்ளது.
பிரேசில் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த நரமாமிச கொடூரம் குறித்து தற்போது
விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
!!!!!!!!!!
மத்திய கிழக்கின் காசா பகுதியில் பாலத்தீன இயக்கமான ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலுடன் ரகசியமாக
இணைந்து செயற்படுபவர்கள் என்று அந்த அமைப்பு கருதும் நபர்களுக்கு எதிரான துன்புறுத்தல்
நடவடிக்கைகளை கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து நடத்தி வருவதாக சர்வதேச மனித உரிமைகள்
அமைப்பான அம்னஸ்டி இண்டர் நேஷனல் அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.
காசாவுக்குள்ளிருந்து வந்திருக்கும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே தமது அறிக்கை
அமைந்திருப்பதாக அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் பலர்
காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும்
அம்னெஸ்டியின் அறிக்கை தெரிவிக்கிறது.
!!!!!!!!!!!!
ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட
தெற்கு விக்டோரியா பகுதியிலுள்ள சமூகங்களை கட்டியெழுப்பும் விதமாக பல மில்லியன்
டாலர்கள் செலவு செய்யப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் கெவின் ரட் உறுதியளித்துள்ளார்.
இந்தக் காட்டுதீயினால் இதுவரை 180 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
மேலும் கருகிப்போயுள்ள நிலப்பரப்பில் தேடும் போதும் இன்னும் பல உடல்கள் காணப்படுகின்றன
என்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகிறார்கள்.
நாட்டில் வன்செயல்கள் குறித்த மிகப்பெரிய விசாரணை தொடங்கியுள்ளது. இந்தக் காட்டுத்தீ
தெரிந்தே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கும் போது, ஆஸ்திரேலிய மக்கள்
வாயடைத்து போயுள்ளனர் என்றும், இது மிகப் பெரிய அளவிலான படுகொலை என்றும் பிரதமர் கெவின்
ரட் மேலும் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!
sports
இலங்கை அணிக்கு எதிரான 20-20 போட்டியில் பதான் சகோதரர்களின் அதிரடி
ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
பெற்றது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அந்த
அணிக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று மோதியது. கொழும்பு பிரேமதாசா
மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தில்சான்
முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
தொடக்க வீரர்களாக தில்சானும், ஜெயசூர்யாவும் களம் இறங்கினர். முதல் ஓவரிலேயே
தில்சானுடைய கேட்ச்சை இர்பான் பதான் கோட்டை விட்டார். இந்த வாய்ப்பை தில்சான் நன்கு
பயன்படுத்திக் கொண்டார்.
இரண்டு பேரும் தங்களது அதிரடியால் ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 59 ரன்களை எட்டிய
போது, ஜெயசூர்யா 33 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள்
அடங்கும்.
!!!!!!!!!!!!!!
1euro = 147.45sl /62.98in
1us $ = 114.20sl /48.78in
1swiss fr = 98.67sl /42.15in
1uk pound =164.65 sl /70.33in