பிரித்தானியா எயார்வேஸ் நிறுவனமும் அங்கம் வகிக்கும் one world(வன்வேர்ல்ட் )விமான

அணியில் இடம்பெற்றுள்ள 66 வருட காலமாக சேவையில் ஈடுபட்டு வருகின்ற மலேவ் என்ற

ஹங்கேரியா விமான நிறுவனம் ஒன்று நிதிநிலை மோசாமடைந்த காரணத்தினால்

வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும் விமான சேவை இயங்காது என்றும்

அறிவிக்கப்படுகின்றது.

2007 இலிருந்து 2010 வரையிலான பெறப்பட்ட 130மில்லியன் யுரோ- அரச உதவிகளை

திருப்பி கொடுக்கும்படி ஐரோப்பிய யூனியன் கட்டளையிட்டதைத் தொடர்ந்தே நிதி

நெருக்கடி நிலை ஏற்பட்டது. இத்தொகை 2009 -2010க்குரிய மொத்த வருமானத்திற்கு

நிகரானது. இந்த நிறுவனம் 2600 பேரை தொழிலுக்கு வைத்துள்ளது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil