வர்த்தக போட்டி காரணமாக யாழ்ப்பாணத்தில் கேபிள் ரி.வி. வழங்குநரனான அலெக்ஸ் என்பவருக்கு டான் தொலைக்காட்சியை நடத்தும் குகநாதன் அரச படைகள் மற்றும் ஆயுதக்குழுகள் மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

வர்த்தக போட்டி காரணமாக யாழ்ப்பாணத்தில் கேபிள் ரி.வி. வழங்குநரனான அலெக்ஸ் என்பவருக்கு டான் தொலைக்காட்சியை நடத்தும் குகநாதன் அரச படைகள் மற்றும் ஆயுதக்குழுகள் மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலெக்ஸ் கேபிள் ரி.வி. வழங்குநரின் வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் சிலர் துப்பாக்கியைக் காட்டி தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தனர் என்று பாலசுந்தரம் அலெக்ஸ்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
கேபிள் தொலைக்காட்சி சேவைகளை நீண்டகாலமாக யாழ் குடாநாட்டில் வழங்கி வந்த பாலசுந்தரம் அலெக்ஸ்குமார் என்பவரை தன்னுடன் இணைந்து கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்குவோம் என போலியான சில பத்திரங்களை காட்டி குகநாதன் தன்னை ஏமாற்றி தமது நிறுவனத்தின் சொத்துக்களை அபகரித்து விட்டு தற்போது ஆயுதப்படையினரின் உதவியுடன் தனக்கு குகநாதன் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அலெக்ஸ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil