இலங்கைக்கு வரும் குறுகிய கால பயணிகளுக்கு இன்றுமுதல் இணையத்தளம் மூலமான முன் அனுமதி அவசியம்

இலங்கைக்கு குறுகியகால பயணங்களை மேற்கொள்வோர் மற்றும் இடைத்தங்கல் பயணிகள் நாட்டை வந்தடைவதற்கு முன்னர் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து பயண அனுமதியைப் பெற்றுக்கொள்வது இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈ.ரி.ஏ. எனும் இத்திட்டத்தின் மூலம் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை வந்தடைந்தபின் விஸா பெறும் முறை நீக்கப்படுகிறது.

எனினும் சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு பிரஜைகள் தொடர்ந்தும் நாட்டை வந்தடைந்தவுடன் விஸாபெற்றுக்கொள்ளலாம். இந்நாடுகள் இலங்கையர்களும் இதே சலுகையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு : www.eta.gov.lk/slvisa

 

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil