மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 148 பேர் பலி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் சங்கராம்பூர், மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சட்டவிரோத மதுபான நிலையங்களில் இவர்கள் மது அருந்தியபின் உபாதைகளுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மதுவை அருந்தியதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 வைத்தியசாலைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இவர்களில் 50 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் மாநில சட்டசபையிலும் விவாதங்களுக்கு வழிவகுத்தது. இச்சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டு 93 பேர் பலியாகி ஒரு வாரத்திற்குள் சட்டவிரோத மதுபானத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil