சீனச் செல்வாக்கு அதிகரிப்பது ஓர் அச்சுறுத்தல் அல்ல: இந்தியாவில் இலங்கை இராணுவத் தளபதி

இந்து சமுத்திரத்தில் அதிகரித்துவரும் சீனச் செல்வாக்கானது இந்திய உபகண்டத்திலுள்ள
எந்த நாட்டுக்கும் எந்த  அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என இந்தியாவுக்கு விஜயம்
மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய
கூறியுள்ளார்.

தெஹரதுன் நகரிலுள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் இராணுவ
உத்தியோகஸ்தர்கள் பயிற்சிமுடிந்து வெளியேறும் வைபவத்தில் கலந்துகொண்டபின்னர்
செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவுக்கும்
இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் அதிகரித்து வருகின்றன.  இரு நாடுகளின்
இராணுவங்களும் பயிற்சிகள் உட்பட பல்வேறு துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைத்து வருகின்றன
என அவர் கூறினார்.

இந்திய இராணுவக் கல்லூரியில் இதுவரை இலங்கை இராணுவ
உத்தியோகஸ்தர்கள் 120 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்iகியல் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டாலும் ஏனைய
நாடுகளில் அவர்களில் அனுதாபிகள் உள்ளதாகவும் இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல்
ஜகத் ஜயசூரிய கூறினார்.
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறித்து
கேட்டபோது, இப்போது நிலைமை சாதாரணமாகி வருவதாகவும் மக்கள் தமது இடங்களுக்கு
திரும்பிவர ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil