திருட்டை சுட்டிக்காட்டினாலும் திருந்தாத மனிதன் இணையத்தள போலிகள்

 

நேற்று எங்கள் இணையத்தளத்தில் கனடாவிலிருந்து எமது சகோதர இணையத்தள உரிமையாளரால் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்ட தலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை என்ற வீடியோவை அதற்குரிய செய்தியை நாம் எழுதி தினக்கதிரில் வெளியிட்டோம். அந்த வீடியோவும் செய்தியும்  எமது தமிழ்வணிகம் மற்றும் தினக்கதிர் இணையத்தளங்களுக்கு சொந்தமானது.

வந்த வீடியோவையும் செய்தியையும் எமது இணையத்தளத்தில் நாம் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே மனிதன் என்ற திருட்டு இணையத்தளத்தை நடத்துபவர்கள் திருடி ( அது அவர்களின் பழக்க தோசம்) மனிதன் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார்கள்.

வீடியோவையும் செய்தியையும் எடுங்கள். ஆனால் எந்த ஊடகத்திலிருந்து பெற்றோம் என்பதை குறிப்பிட்டு அந்த ஊடகத்திற்கு நன்றி என குறிப்பிடுங்கள் என்பதை சுட்டிக்காட்டி மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம்.

முகமூடியை போட்டுக்கொண்டு திருட்டு வேலையை செய்யும் மனிதன் இணையத்தளத்தினர் எமது அறிவுரையை ஜீரணிக்க முடியாதவர்களாக எம்மை சிறிலங்கா அரசாங்கத்தின் உளவாளிகள் என பிரசாரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். இதில் எமக்கு எந்த கவலையும் இல்லை. தங்களை யார் என இனங்காட்டாது முகமூடி திருடர்கள் பேச்சை நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை.

நேற்று ஞாயிறு மாலை இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பிய உடன்தான் எம்மைப்பற்றி அவதூறாக செய்தி எழுதி மனிதன் என்ற தமது திருட்டு இணையத்தளத்தில் பிரசுரித்திருக்கிறார்கள். திருட்டு வேலையை செய்ய வேண்டாம் என நாம் மின்னஞ்சல் அனுப்பிய பின்னர்தான் இதை எழுதினார்கள் என்பதை இவர்களால் மறுக்க முடியுமா?   திருட்டை சுட்டிக்காட்டியவுடன் இவர்களுக்கு கோபம் வருகிறது

முதலில் இவர்களுக்கு துணிவிருந்தால் ஒரு சிறுதுளி நேர்மை இருந்தால் இவர்கள் தங்களை யார் என்று மக்கள் முன் இனங்காட்டுவார்களா?   ஊடகம் என்றால் நேர்மையிருக்க வேண்டும். வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்றுதான் எனக்கு ஊடகத்துறையை கற்றுத்தந்த கோபு ஐயா தொடக்கம் அத்தனை மூத்தபத்திரிகையாளர்களும் சொல்லித்தந்திருக்கிறார்கள்.

இந்த ஊடக தர்மமும் ஊடக நேர்மையும் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே இருக்குமே ஓழிய மனிதன் இணையத்தளத்தை நடத்தும் திருடர்களிடம் எதிர்பார்ப்பது எங்கள் தவறுதான்.  மனிதன் இணையத்தளத்தை நடத்தும் திருடர்களின் செயலை பார்க்கும் போது ஒரு கதைதான் ஞாபகம் வருகிறது.

மழையில் நனையும் குரங்கைப்பார்த்து என்னைப்போல உனக்கென ஒரு கூட்டை கட்டியிருந்தால் மழையில் நனைய வேண்டி இருக்காதே என தூக்கணாம் குருவி ஒன்று ஆலோசனை கூறியதாம். குரங்கிற்கு அந்த நல்ல ஆலோசனையை கேட்கும் பக்குவம் இருந்தால்தானே. உடனடியாக தூக்கணாம் குருவியின் கூட்டை சின்னாபின்னமாக பிய்ந்த்து எறிந்தது குருங்கு. குரங்குகளுக்கு ஆலோசனை கூறக்கூடாது என்பதற்கு உதாரணமாக இதை கூறுவார்கள்.

திருட்டை செய்ய வேண்டாம். சரி திருடினாலும் நன்றி என்றாவது போடுங்கள் என நாம் ஆலோசனை வழங்கினோம்.

குரங்கு குரங்குப்புத்தியை தானே காட்டும். நாங்கள் அவர்களிடம் அதற்கு மேல் நல்ல பண்பை எப்படி எதிர்பார்க்க முடியும்.

மனிதன் இணையத்தளத்தை நடத்துபவர்கள் யார் இதன் பின்னணி என்ன என்ற அத்தனை விடயங்களையும் நாம் விரைவில் வெளியிடுவோம். அப்போது திருடர்களின் முகமூடிகள் கிழியும்.

என்னுடைய ஊடகத்துறை நண்பர்களுக்கு ஒரு ஆலோசனை. இவர்களைப்போன்ற திருடர்களுக்கு ஆலோசனை வழங்க கூடாது. இவர்கள் ஒருபோதும் திருந்த போவதில்லை.

1 விமர்சனம் to “திருட்டை சுட்டிக்காட்டினாலும் திருந்தாத மனிதன் இணையத்தள போலிகள்”

  1. pulampeyar tamilan Says:

    நம்மவரின் தமிழ் வானொலிகளின் வருகை நாளுக்கு நாள் கூடிகொண்டே போகிறது தமிழ்முழக்கம் fm , radiotam ,தமிழிசை.fm ரூபம் இன்னும் நிறைய இருக்கின்றன

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil