இலங்கையர் சிலரை ஏற்றிய கப்பல் ஒன்று கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றுள்ளது

இந்த கப்பலில் 95 இலங்கையர்கள்..

இலங்கையர் சிலரை ஏற்றிய கப்பல் ஒன்று கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றுள்ளது :

 

 
இலங்கையர் சிலரை ஏற்றிய கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றுள்ளது.  இந்த கப்பலில் 95 இலங்கையர்கள் இருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
 
 
கடந்த புதன் கிழமை, இந்த கப்பல் உட்பட அகதிகளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றுள்ளது. அந்த இரண்டு கப்பல்களில் 200க்கும் மேற்பட்ட அகதிகள் இருந்ததாகவும், இவர்களில் இலங்கையர்களை தவிர, ஈரான், ஈராக் நாட்டவர்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
அதேவேளை கடந்த மாதத்தில் மாத்திரம், 892 பேர் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றுள்ளனர்.  2011 ஆம் ஆண்டில் இதுவரை  3 ஆயிரத்து 708 பேர் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil