வேலை வழங்குமாறு யாழ் நகரில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்ட பேரணி

Published on December 2, 2011-9:48 am   ·   No Comments

யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் வழங்கக்கோரி இன்று கவனயீர்ப்பு பேரணியென்றை நடாத்தியுள்ளனர்

இன்று காலையில் யாழ்.பெருமாள் கோயில் முன்னறில் ஒன்று கூடிய சுமார் 700 இற்கும் அதிகமான பட்டதாரிகள் அங்கு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து பேரணியாக யாழ்.மாவட்டச்செயலகம்  நோக்கி சென்றனர் அங்கிருந்து பின்னர் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனின் அலுவலத்தை அவர்கள் சென்றடைந்து அங்கு 5 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை இளங்கோவனிடம் கையளித்தனர்

இதற்கு பதிலளித்த ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் இக்கோரிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அத்தோடு பேரணியினரையும் கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேவேளை இப்பேரணியைக்காக ஆளுநரின் செயலாளரின் அலுவலகத்தை சுற்றி கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil