கிளிநொச்சிக்கு சங்கீதம் படிப்பிக்க சென்ற ஆசிரியர் மாணவி மீது காமசங்கீதம்!

Published on December 2, 2011-10:45 am   ·   No Comments

கிளிநொச்சி – வட்டக்கச்சி மகாவித்தியாலயத்திற்கு புதிதாக யாழ்பாணத்திலிருந்து சங்கீத பாடத்திற்கு நியமனம் பெற்றுவந்த திருமணமான இளம் ஆசிரியர் ஒருவர் தரம் எட்டு  மாணவியிடம் பாடசாலையில் வைத்து தகாத முறையில் நடந்து கொண்டமையால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. இந்த மாணவியின் தந்தை யுத்தத்தின் போது இறந்துவிட்டார். இதனால் தாய் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்.  மாணவி தனது அம்மம்மாவின் பராமரிப்பில் இருந்து வருகின்றார்.  அவர்களின் வறுமையினை தனக்கு சாதகமாக பயன்படுத்தியே இந்த ஆசிரியர் மாணவியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார். 

இந்த ஆசிரியர் தற்போது பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். வட மாகாண கல்வித் திணைக்களத்தினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil