சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயரை மாற்றக்கூடாது ஏறாவூரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published on December 2, 2011-2:21 pm   ·   No Comments

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹூஸைன் கிராமத்தை ஈராக் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து சதாம் ஹூஸைன் கிராம மக்கள் வீதியிலிறங்கி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

சதாம் ஹூஸைன் கிராமத்திலுள்ள அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை நண்பகல் ஜூம்மா தொழுகையின் பின்பு பள்ளி வாயல் முன்பு கூடிய நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

‘மாற்றாதே மாற்றாதே எமது கிரமத்தின் பெயரை மாற்றாதே’,’எங்கள்கிராமம் சதாம் ஹூஸைன் கிராமம்’ ‘சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயரைமாற்றாதே’ உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் பள்ளிவாயல் முன்றலிலிருந்து பிரதான சந்திவரை கவன ஈர்ப்புப் பேரணியொன்றையும் நடத்தினர். 

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘அல்லாஹூ அஹ்பர்’கோசத்துடன் மர்ஹூம் சதாம் ஹூஸைனை நினைவு கூர்ந்தும் கோசங்களை எழுப்பினர். சதாம் ஹூஸைன் கிராம இஸ்லாமியசமூக நல அபிவிருத்திச் சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

பேரணி முடிவில் தமது கிராமத்தின் பெயரை சதாம் ஹூஸைன் கிராமம் என பதிவு செய்யவேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும் வேறு பெயரைத் தமது கிராமத்திற்குச் சூட்டக்கூடாது என்று கோரியும் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரில் கிராம மக்களின் கையொப்பங்களும் திரட்டப்பட்டன.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil