மீள்குடியேற்றம் என இமெல்டா பிரசாரம்- இராணுவத்தினர் மக்களை அடித்து விரட்டினர்

Published on November 29, 2011-4:55 pm   ·   No Comments

கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வளலாய் மற்றும்
இடைக்காடு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்ற த்திற்கு என
அழைத்துச்செல்லப்பட்ட பொது மக்கள் ஏமாற்றத்துடன் தமது வீடுகளை கூட பார்வையிட
முடியாதவர்களாய் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பட்டனர்

கோப்பாய் பிரதேச செலயகப்பிரிவுக்குட்பட்ட
இப்பகுதியிலிருந்து 1990ம் ஆண்டு முதல் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இன்நிலையில்
இன்று அப்பகுதியில் மீள்குடியேற்றதிற்கென மக்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்  இதனைத்
தொடர்ந்து வளலாய் பிள்ளையார் கோவில் முன்னறில் மீள்குடியேற்ற பிரசாரக்கூட்டம்
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது  யாழ்.அரச
அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மற்றும் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர்
ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்வில் அரச அதிபரும் இராணுவத்தளபதியும் மாறிமாறி
ஒருவரை ஒருவர் புகழ்ந்து தள்ளியதுடன் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவையும் புகழ்ந்தனர்
இதனைத் தொடர்ந்து மக்கள் நீங்கள் உங்கள் சொந்த இடங்களுக்கு செல்லலாம் என்று கூறி
அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்றனர்.

மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முற்பட்ட
வேளையில்  அப்பகுதிகளுக்குப் பொறுப்பான இராணுத்தினர் அவர்களை அவர்களது சொந்த
இடங்களையும் வீடுகளையும் பார்க்க விடாது தடுத்ததோடு அவர்களை அப்பகுதிக்கே
செல்லக்கூடாது என்று அடித்து விரட்டனார்கள்

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரிடம் மக்கள்
முறையிட்ட போது பிரதேச செயலாளர் இராணுவத்தினருடன் பேசினார். அதன் பின்னர் இங்கு
மீள்குடியேற முடியாது. வீதி ஓரமாக சென்று வீடுகளை பார்த்துவிட்டு திரும்ப வேண்டும்
என உத்தரவிட்டனர்.

மக்கள் எவரும் உள்ளே
செல்லவோ அல்லது வீதியை விட்டு இறங்கவோ இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. 15
நிமிடங்களுக்குள்  மக்கள் அனைவரையும் இராணுவத்தினர் அடித்து
விரட்டினார்கள்
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு மீள்குடியேற்றத்திற்கென அழைத்து
வரப்பட்ட மக்கள் அரச அதிபரையும் இமெல்டா சுகுமாரையும், இராணுவத்தளபதி
ஹத்துருசிங்காவையும்  திட்டிக்கொண்டே தமது வீடுகளுக்கு திரும்பி சென்றனர்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil