மகிந்த ராசபக்சவை கொலை செய்ய சதிசெய்தார்- கனகரத்தினத்தின் மகன் மீது குற்றப்பத்திரிகை!

Published on November 29, 2011-1:42 pm   ·   No Comments

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புசெயலாளர் கொதபாயா
ராஜபக்ச மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்செகா ஆகியோரை கொலை செய்ய சதி
செய்ததாக முன்நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது
சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராகவும் இருக்கும்  சதாசிவம் கனகரத்தினத்தின்
மகன் ஆதித்யன் (வயது 32) மீதும் மற்றும் ஒருவர் மீதும் குற்றம் சாட்டி சட்டமா
அதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்துள்ளார்.

வன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சதாசிவம்
கனகரத்தினம் இடம்பெயர்ந்தவர்களுடன் வசித்து வந்தார்.   பின்னர் கடைசி நாட்களில்
இடம்பெயர்ந்தவர்களுடன் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்தார். அவர் பின்னர் கைது
செய்யப்பட்டு எட்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார். அதன்  பின்னர்
விடுவிக்கப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் மகிந்த
ராஜபக்சாவை ஆதரி;த்தார். அதே ஆண்டு ஆளும் கட்சி வேட்பாளராக வன்னி மாவட்டத்தில்
போட்டியிட்டார். ஆனால் பாராளுமன்றத்திற்கு அவர் தெரிவாகவில்லை.

விடுதலைப்புலிகளே மக்களை கொன்றார்கள் என்றும்
மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் கனகரத்தினம் இராணுவத்தினரால்
விடுதலை செய்யப்பட்ட பின்னர் கூறியிருந்தார்.  மிக தீவிரமான மகிந்த ராசபக்ச
ஆதரவாளராக கனகரத்தினம் மாறிய போதிலும் அவரின் மகன் ஆதித்யன் மீது பயங்கரவாத
தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் தற்கொலை
தாக்குதலை நடத்துவதற்காக கொழும்பில் தங்கியிருந்த போது கைது செய்ததாக
குற்றப்புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil