தாயகத்தை கண்முன்நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள் ! ஒன்றுபட்டு மாவீரர்களை வணங்கினர்

தாயகத்தை கண்முன்நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள் ! ஒன்றுபட்டு மாவீரர்களை வணங்கினர்

Published on November 27, 2011-8:51 pm    ·

தமிழர் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாளை கண்முன் கொண்டுவந்த மாவீரர் நாள் நிகழ்வாக பிரான்ஸ் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்துள்ளன. பாரிசின் புறநகர் பகுதியான ஸ்ரான்- லாகூர்னெவ் திறந்தவெளி திடலில் அமைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இந்த மாவீரர் நாள் நடைபெற்றுள்ளது.

தமிழீத் தேசியத்துக்கான விடுதலை அமைப்புக்கள் – தமிழர் பொது அமைப்புக்கள் – விடுதலைச் செயற்பாட்டாளர்களின் கூட்;டிணைவாக அமையப்பெற்ற பிரான்ஸ் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினால் ஓருங்குபட்டுத்தப்பட்ட இந்த மாவீரர் நாளில் மதியம் 2500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

தாயகத்தில் இடம்பெறுகின்ற மாவீரர்நாள் முன்னெடுப்பு மரபுக்கமைய இத்திறந்தவெளி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

1000க்கும் மேற்பட்ட கல்லறைகள் அமைக்கப்பட்டதோடு மாவீரர் நினைவாவய முகப்பலங்காரம் என தாயகத்தை கண்முன் நிறுதத்தியதாக இத்திறந்தவெளித் திடல் அமைக்கப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை புலிகளின் குரல் வானொலியூடாக ஒலிபரப்பபட்டதோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மாவீரர் நாள் செய்தி வாசிக்கப்பட்டது.

தாயகத்து துயிலும் இல்ல மாவீரர் நாளை தரிசிக்க முடியாமல் போனவர்களுக்கு இந்த திறந்தவெளி துயிலும் இல்ல மாவீரர் நாள் மனநிiவைத் தந்ததோடு அனைவரைக்கும் உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்திருந்தது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil