மாவீரர்நாளில் விசேட விருந்து தருவதாக கூறி தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்!

மாவீரர்நாளில் விசேட விருந்து தருவதாக கூறி தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்!

Published on November 27, 2011-2:19 pm    ·

அநுராதபுரச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவீரர்நாளாகிய இன்று அநுராதபுரச் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு உணவு வழங்கமறுத்த காவலாளிகள் அவர்கள் மீது இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

‘இன்று உங்களுக்கு விசேட நாள் வாருங்கள் உங்களுக்கு விசேடமாக விருந்தளிக்கின்றோம்’எனக் கூட்டிச்சென்ற சிறைச்சாலை அதிகாரி குணரட்ன தலைமையிலான குழுவினர் அவர்களது உடைகளை களைந்து எரித்ததுடன் அவர்கள் மீது இரும்பு கம்பிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். அரிகரன் (யாழ்ப்பாணம்),  சசி (வவுனியா), நிக்சன் (திருகோணமலை), தயா (வட்டக்கச்சி)  ஆகியோர் மிகமோசமான தாக்குதலுக்கு ஆளாகி காயமடைந்துள்ளனர்.  இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சிங்கள காடையர்களும் தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் அங்குள்ள கைதிகள் தெரிவித்துள்ளனர்.
ஊனமுற்ற தமிழ் கைதிகளின் ஊன்றுகோல்களை பறித்தெடுத்து அதனால் தாக்கிவிட்டு அதனை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கைதிகள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil