புதையல் தோண்டிய இராணுவத்தினர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்

புதையல் தோண்டிய இராணுவத்தினர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்!

Published on November 22, 2011-9:15 am ·

பொத்துவில் பிரதேச காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய நான்கு இராணுவத்தினர் உட்பட பத்துப் பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்;. புதையலில் இருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக் கற்கள் பளிங்குக்கற்கள் போன்றவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொத்துவில் பாணமை பிரதான வீதியில் இருந்து 8 கிலோமீற்றர் தூரம் கொண்ட காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்தபோது மூன்று பேர் கைது செய்யப்பட்டதுடன் ஏனையவர்கள் தப்பியோடினர்.

இச்சம்பவத்தில் தப்பிச் சென்றவர்களிடம் புதையலிலிருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக் கற்கள் பளிங்குக் கற்கள் இருந்ததாகவும், இதில் நான்கு பேர் இராணுவத்தினர் எனவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாகிய 4 இராணுவத்தினரையும் ஏனைய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புதையலிலிருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக்கற்கள் பளிங்குக்கற்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மற்றும் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil