யாழ்ப்பாணத்தில் உயரதிகாரிகளாக சிங்களவர்கள் நியமனம்- மொழி புரியாது மக்கள் அவதி!

யாழ்ப்பாணத்தில் உயரதிகாரிகளாக சிங்களவர்கள் நியமனம்- மொழி புரியாது மக்கள் அவதி!

Published on November 22, 2011-9:12 am ·

யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை, சமுர்த்தி அதிகாரசபை, மின்சாரசபை, பிரதேசசெயலகங்கள் உட்பட முக்கிய பொறுப்புகளுக்கு சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சிற்றூழியர் தொடக்கம் அதிகாரிகள் வரை அனைவரும் சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் சபைகளின் மாவட்ட தலைமை பதவிகளுக்கு சிங்களவர்கள் நியமிக்கப்படுவதால் தீர்மானத்தை எடுப்பவர்களாக அவர்களே உள்ளனர். பொதுமக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துக்கூற முடியாத மொழிப்பிரச்சினை காணப்படுகிறது என யாழ். மாவட்ட பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

சிங்கள அதிகாரிகளுக்கு தமிழ், ஆங்கில மொழிகள் அறவே தெரியாது. வடபகுதி பொதுமக்களுக்கு சிங்களம் தெரியாது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

பொதுமக்கள் தமிழில் எழுதும் கடிதங்கள், மற்றும் படிவங்களை அறிந்து கொள்ள முடியாதவர்களாக சிங்கள அதிகாரிகள் காணப்படுகின்றனர். இதனால் சிங்களத்தில் எழுதப்படும் கடிதங்களுக்கே பதிலளிக்கும் நிலையும் காணப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் சிங்களத்தில் தான் அனைவரும் அலுவலகங்களுக்கு கடிதம் எழுத வேண்டிய நிலை ஏற்படும் என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். அலுவலக உத்தியோகத்தர்களாக 7 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி வேலைகளிலும் சிங்கள தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்தியப் பிரதிப் பொது முகாமையாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு உதவிப் பிரதேச செயலர்களாகச் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் மன்னார் மாவட்டத்தின் அரச அதிபராகவும் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil