ஊடகவியலாளர்களுக்கு சவப்பெட்டிகள் தயார் நிலையில்- கஜேந்திரன் பணியில் மேர்வின்!

ஊடகவியலாளர்களுக்கு சவப்பெட்டிகள் தயார் நிலையில்- கஜேந்திரன் பணியில் மேர்வின்!

Published on November 21, 2011-8:59 am ·

அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படும் வகையிலான தகவல்களை வெளியிடுகின்ற ஊடகவியலாளர்கள் தமக்காக சவப்பெட்டி ஒன்றை தயார்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கா மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, ஊடகவியலாளர்களை எச்சரித்துள்ளார்.
கட்டுநாயக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேர்வின் சில்வா, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தற்போது சில ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக அமையவில்லை எனவும் நாட்டின் முக்கிய நபர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான செய்திகளை அவர்கள் வெளியிடுவதாகவும் மேர்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.
டொலர்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிடுவதாகவும், தமக்கு எதிராகவும் சிலர் இவ்வாறான சேறு பூசல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil