பாதுகாப்பு அமைச்சுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யும் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில்

பாதுகாப்பு அமைச்சுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யும் வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில்!

Published on November 21, 2011-8:50 am ·

2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பார்.பிற்பகல் 1.30 மணியளவில் வரவு செலவு திட்டத்தை சபையில் சமர்ப்பித்து விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர் அவரால் சமர்ப்பிக்கப்படும் 6 ஆவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு இந்த முறை தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் விவாதத்திற்கு விடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமைவரை நடைபெறும். அத்துடன், அன்றையதினம் மாலை 3 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் டிசம்பர் 21 ஆம் திகதிவரை நடைபெறும். அன்று இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இக்காலப்பகுதிக்குள் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வெளிநாடு செல்லக்கூடாது என அரசு அறிவித்துள்ளது
வழமைபோல் இந்தத் தடவையும் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil