விபச்சாரம், போதைப்பொருள் விற்பனையை ஊக்குவிப்பதில் யாழ் மேயர் யோகேஸ்வரி!

விபச்சாரம், போதைப்பொருள் விற்பனையை ஊக்குவிப்பதில் யாழ் மேயர் யோகேஸ்வரி!

Published on November 20, 2011-7:35 pm ·

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபச்சாரம் முற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச்செயற்பாடுகளை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஊக்குவிக்கின்றார் என ஆளும் மாநகரசபை உறுப்பினர் நிசாந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்.நகரில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனை விபச்சாரம் கசிப்பு உள்ளிட்ட சட்;ட விதச் செயற்பாடுகளை மாநகர மேயரே தூண்டி விடும் விதமாக செயற்படுகின்றார் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக விடுதிகள் இயங்குகின்றன. போதைப்பொருள் வியாபாரமும் நடைபெறுகின்றது. இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநகர சபை மேயரிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரையில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை
பொலிஸார் தகவல் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவிக்கின்றனர் தாமாக முன்வந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் இல்லை
கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத விடுதிகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகர சபையில் கூறினேன்
ஆனால் இதுவரையில் அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையென்றும் இதனால் அவர் மீது சட்டநடவடிக்கையை எடுக்க தாம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil