கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான், கருணா, முஸ்லீம் குழுக்களிடம் பெருந்தொகை ஆயுதங்கள்

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான், கருணா, முஸ்லீம் குழுக்களிடம் பெருந்தொகை ஆயுதங்கள்!

Published on November 20, 2011-7:31 am · No Comments

கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் வைத்திருந்த 3440 ஆயுதங்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிடம் உள்ள ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு காவல்துறையினர் விடுத்த உத்தரவிற்கு அமைய இவ்வாறு ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை, கந்தளாய், திருகோணமலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசமிருந்த ஆயுதங்கள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்களை பொறுப்பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த வாரத்துடன் முடிவடைவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் மாகாணத்தில் காணப்படும் சட்டவிரோத ஆயுதங்களை கண்டு பிடிக்கும் நோக்கில் பாரியளவிலான தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களில் அதிகமானவை எல்லைப்புற சிங்கள கிராமங்களின் பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழு, கருணாகுழு மற்றும் முஸ்லிம் குழுக்களிடம் பெருந்தொகையான ஆயுதங்கள் உள்ளன.
விடுதலைப்புலிகளிடமிருந்து கருணா பிரிந்த போது கிழக்கில் பெருந்தொகையான ஆயுதங்கள் இருந்தன. கிழக்கு மாகாணத்தில் அப்போது இருந்த விடுதலைப்புலிகளின் தகவல்களின் படி சுமார் 40 பாரிய ஆயுதங்களஞ்சியங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆயுதங்களில் ஒருபகுதி பிள்ளையான் மற்றும் கருணா குழுக்களால் முஸ்லீம்களுக்கு விற்கப்பட்டுள்ளது. அத்துடன் கருணா பிரிந்த நேரத்தில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் தமது ஆயுதங்களை எறிந்து விட்டு தமது வீடுகளுக்கு சென்றிருந்தனர். அந்த ஆயுதங்களை சில பொதுமக்கள் எடுத்து முஸ்லீம் ஆயுதக்குழுக்களுக்கும் விற்றுள்ளன.
இந்த ஆயுதங்கள் எவையும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil