இறுதிக்கட்ட யுத்தம் பற்றி அரசாங்கம் விசாரணையை நடத்த வேண்டும் -ஆணைக்குழு அறிக்கை

இறுதிக்கட்ட யுத்தம் பற்றி அரசாங்கம் விசாரணையை நடத்த வேண்டும் -ஆணைக்குழு அறிக்கை

Published on November 20, 2011-5:55 am ·

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படவிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணையை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று கோரப்படவிருப்பதாக சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அக்குற்றச்சாட்டுக்களுக்கான ஆரம்ப ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஆணைக்குழு சம்பவங்கள் பற்றியோ மற்றும் அச்சம்பவங்களில் பங்குபற்றியவர்கள் பற்றிய அடையாளங்களையோ அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழு தனது 400 பக்க அறிக்கையில் சணல் 4வின் கொலைக்களம் ஆவணம் முற்றாக புனையப்பட்டதொன்று என்றும் தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:-

1. பொதுமக்களின் அபிப்பிராயப்படி இனப்பிரச்சினை அரசியல்வாதிகளால் தங்களின் வாக்கு வங்கியை அதிகரிக்க உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஒருவரின் இனத்தை மையமாக வைக்காது இலங்கை பிரஷை என்பதை மையமாக வைத்து இனரீதியான அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். சிறிமாவோ ஆட்சியில் பல்கலைக்கழக அனுமதிக்கு தரப்படுத்தல் முறை கொண்டு வரப்பட்டதை அடுத்தே பிரச்சினை ஆரம்பித்தது.

2. 1983 ஜூலை இனக்கலவரம் பற்றியும் அறிக்கையில் விஸ்தாரமாக ஆராயப்பட்டுள்ளது.

3. நாட்டின் எந்தப்பகுதியிலும் இலங்கையன் காணி வாங்குவதற்கு உரித்துள்ளவர்கள்.

4. தருஸ்மன் அறிக்கை என்றழைக்கப்படுகின்ற ஐநா நிபுணர் குழு அறிக்கையையும் ஆணைக்குழு தனது கவனத்திற்கு எடுத்துக்கொண்டது

என சண்டேரைம்ஸ் தெரிவித்துள்ளது

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil